படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." பீர்பாலை அக்பர் கேட்டார் "நீ எங்கிருந்து இவ்வளவு அறிவை அடைந்தாய்?" பீர்பால் "முட்டாள்களிடமிருந்து. அவர்கள் செயல்பாடுகளைப் பார்த்து அந்தத் தவறுகளை நான் செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன். அதுவே என்னை அறிவாளியாக்குகிறது. நமக்கு அறிவைத் தருகிற அளவிற்கு நிறைய முட்டாள்களும், புத்தி கெட்டவர்களும் இருக்கிறார்கள்" என்றார். அடுத்தவர்களுடைய தவறுகளிலிருந்தும், நம்முடைய பழைய செயல்பாடுகளிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்ளமுடியும். பயிற்சியின்போது அவ்வாறு தவறு நிகழ்வதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி விளக்கம் பெறலாம். இப்போது பல நிறுவனங்கள், பணியில் சேரும்போது அளிக்கிற பயிற்சியோடு நிறுத்தி விடுகின்றன. அடிக்கடி பயிற்சி தேவைப்படுகிறது. அது சகப்பயிற்சியாளர்களிடம் கற்றுக் கொள்ளவும், அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பெரிய வாய்ப்பாக அமையும். எந்தெந்த நிறுவனங்கள் தரமான பயிற்சியில் அதிக முதலீடு செய்கின்றனவோ அவையே சிறந்த பணியாளர்களை உருவாக்குகின்றன" முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 487 இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்