படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." ஜேன் ஆஸ்டன் எழுதிய புகழ்பெற்ற நாவல், 'பிரைட் அண்ட் ப்ரிஜிடிஸ்'. முதல் பார்வையில் ஒருவரைப் பற்றி நாம் கொள்ளும் அபிப்பிராயம் எவ்வளவு தவறாக இருக்கும், இதை மட்டுமே வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்பதற்கு இந்த நாவல் உதாரணம். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த டிஸ்ரேலி அதை நான்கு முறை படித்தாராம். முதல்முறை பார்த்தபோது எலிஸபெத் என்ற பெண்ணுக்கு டார்சி என்கிற இளைஞன் திமிர் பிடித்தவன் போல தோன்றுகிறான். ஆனால் அவனோ உண்மையில் நல்லவன், போகப்போக அவனுடைய விருந்தோம்பலும், நாகரிகமான நடவடிக்கைகளும் அவளுக்குத் தெரிகிறது. அவன் எலிஸபெத்தின் ஓடிப்போன சகோதரியின் திருமணத்திற்கு நிறைய செலவழித்து ஏற்பாடு செய்கிறான். எலிஸபெத் அதுவரையில் அவன் மீது கொண்ட காழ்ப்புணர்வை மாற்றிக் கொண்டு அவனோடு திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். முதல் அபிப்பிராயம் முடிவான அபிப்பிராயமாக இருக்கவேண்டியதில்லை." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 474 இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்