இனிய காலை வணக்கம் ."
என்னுடைய மனவியல் பேராசிரியர் ஒரு முறை வகுப்பில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் வெளிநாட்டிற்குப் பயிற்சி ஒன்றுக்குச் செல்லுகிறீர்கள். அங்கே ஒரு பாகிஸ்தானி, ஜப்பானியர், சீனர், சிங்களர் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருடன் நீங்கள் அறை பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரைத்
தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்ட போது முக்கால் வாசிப்பேர் ஜப்பானியரோடு தான் என்று பதில் அளித்தார்கள்.
எல்லாப் பாகிஸ்தானிகளும் மோசமானவர்கள் என்பது நம்மீது திணிக்கப்பட்ட எண்ணம். இதைப்போன்ற எண்ணமே பல நிலைகளில் நமக்கு நீடிக்கிறது. நம் அறைக்கு வருகிற குறிப்பிட்ட ஜப்பானியர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எதையும் பொதுப்படையாகப் பார்க்கும் நம் மனப்பான்மை அதைப்பற்றி ஆழச் சிந்திக்க விடாமல் நம்மைத் தடுத்து விடுகிறது.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 472&473
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180. ***** புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார். அப்போது முனைவர் பட்ட ...

கருத்துகள்
கருத்துரையிடுக