நாற்கரம் பதிப்பகம் மகளிர் தினச் சிறப்பு நூல் விமர்சனப் போட்டி

நாற்கரம் பதிப்பகம் மகளிர் தினச் சிறப்பு நூல் விமர்சனப் போட்டி சிறந்த விமர்சனங்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களுடன் எதிர்பாரா வியப்பூட்டும் பரிசுகளும் உண்டு. விதிமுறைகள்: 1. பெண்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். 2. நாற்கரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களுக்கான விமர்சனங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 3. பதிவுகள் 500 முதல் 600 சொற்களுக்குள் இருக்க வேண்டும். 4. பதிவுகளை அவரவர் முகநூல் பக்கத்தில் எழுதி நாற்கரம் முகநூல் பக்கத்தை கண்டிப்பாக டேக் செய்ய வேண்டும். 5. விமர்சனங்கள் வீடியோ வடிவிலும் இருக்கலாம். காணொளி அளவு 60 முதல் 90 விநாடிகளுக்குள் இருக்க வேண்டும். 6. காணொளி விமர்சனங்களுக்கு சிறப்புப் பரிசுகள் உண்டு. 7. தேர்வாகும் 3 சிறந்த பதிவுகளுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும். நடுவர்கள் பரிந்துரைக்கும் மற்ற பதிவுகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. 8. நாற்கரம், எதிர் வெளியீடு, யாவரும் பதிப்பகங்களிலிருந்து வெற்றியாளரே நூல்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். (500 ரூபாய்க்கு நாற்கரம் நூல்கள், மற்றவை பொதுவான தேர்வு) 9. பதிவாளர், நாற்கரம் பதிப்பக முகநூல் பக்கத்தினை ஃபாலோ செய்வதும் டேக் செய்வதும் கட்டாயம். 10. ஒருவரே எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 11. பதிவுகள், காணொளிகள் பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 8, 2026 12. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கருத்துகள்