மனிதகுல மாணிக்கம் தோழர் நல்லகண்ணு மரணம்!*காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்
மனிதகுல மாணிக்கம் தோழர் நல்லகண்ணு மரணம்!*
தோழர் நல்லகண்ணின் வாழ்வியல் பாதை கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான
பாதை.நீண்ட நெடிய பாதையில் நெடுங்காலம் பயணித்து 101 ஆண்டுகள் கடந்தவர்.
சுதந்திரப் போராட்டத்தில் சிறைப்பட்டு சித்திரவதைக்கு ஆளான செம்மல்.வறுமைத்தீ சுட்டாலும் சிறைக்கொடுமை வாட்டினாலும் கொள்கைமாறாக் குன்று.தன்னலமற்ற தகைசால் பெருந்தகை.
கட்சித் தோழர்கள் திரட்டிக் கொடுத்த ஒருகோடி ரூபாயை கட்சிக்குக் கொடுத்தக் குணவாளன் .
அரசு கொடுத்த தகைசால் பெருந்தகை ரூபாய் பத்து லட்சத்தை அரசுக்கே திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் . துறவு மனத்துடன் தூய வாழ்க்கை வாழ்ந்தவர்.
அரசியல் களமானாலும் வாழ்வியல் களமானாலும் தொழிலாளர் போராட்டக் களம் ஆனாலும் எந்தக் களமானாலும் வீரமுழக்கம் எழுப்பி வீரநடை போட்டு வெற்றிவாகை சூடிய போராளி . வள்ளுவர் வகுத்த வாழ்வியல் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்.காந்தியமும் கம்மினிசமும் கலந்த கலவையாகத் திகழ்ந்தவர்.
அரசுக்கு எதிரான போராட்டங்களில் வெற்றியை வென்றெடுத்தவர் மரணதேவனிடம் மட்டும் தோற்று விட்டார்.
காமராஜர் கக்கன் ஜீவானந்தம் போன்ற தூய மாமணியாகத் துலங்கிய மணிவிளக்கு அணைந்து விட்டது. அவரின் வாழ்வியல் வரலாறாகி விட்டது.அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நாம் பெற்ற பெருமை.
தகைசால் பெருந்தகை ஐயா நல்லக் கண்ணுவின் இன்னுயிர் அமைதியில் இளைப்பாறவும் அவரது குடும்பத்தார் ஆறுதல் பெறவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்

கருத்துகள்
கருத்துரையிடுக