படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உயரமான பணியாளர்கள் ஆறடிக்குக் குறைவானவர்களைவிட தொடக்க ஊதியம் 12.4 விழுக்காடு அதிகம் பெற்றது அறியப்பட்டது. இன்னொரு பரிசோதனையில் ஆறடி ஓர் அங்குலம் உயரமான ஒருவரையும், ஐந்தடி ஐந்தங்குலம் உயரமான ஒருவரையும் தேர்வு செய்யக் குழுவை அமைத்த போது அதில் எழுபத்திரண்டு விழுக்காடு உயரமானவருக்கு வாக்களித்தார்கள். நம்மையுமறியாமல் நிறம், உருவம், உயரம், அழகு ஆகியவற்றை நாம் முக்கியமாகக் கருதுகிறோம். சம வாய்ப்பு என்பது ஆப்பிரிக்க - அமெரிக்கனை வெள்ளைக்காரர்கள் பணியில் அமர்த்துவதை விட இன்னும் மேம்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று ஹார்வார்ட் பிஸினஸ் ரிவ்யூவில் கருப்பு மேலாளராக இருப்பது எப்படிப் பட்டது என்ற கட்டுரையில் எட்வர்ட் ஜோன்ஸ் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் இந்த நிலைமை இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. உருவத்தை வைத்து எதையும் எடை போடக்கூடாது என்பதை ஷேக்ஸ்பியர் ‘வெனிஸ்நகர வியாபாரி’ நாடகத்தில் குறிப்பிடுகிறார்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 467&468 இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்