படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய வணக்கம் ." சில கிராமங்களில் பிரச்சினைகள் இருக்கும். மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் அங்கே சென்றால் அந்த மக்கள் பிரச்சினையைச் சொல்லி, அதைத் தீர்ப்பது எப்படி என்று வழிமுறைகளைச் சொல்லுவார்கள். காரணம், அந்தப் பகுதியிலேயே வாழ்ந்தவர்கள். எனவே தலைமுறை தலைமுறையாக அந்தப் பிரச்சினையின் வேரையும் அதன் தீர்வையும் தெரிந்து வைத்திருப்பவர்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்கள் சொல்லுகிற தீர்வுகளுள் சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுத்து அதைச் செயலாக்கம் செய்யும் விதத்தில் பட்டை தீட்டித் திட்டமாக தயாரித்து அவற்றின் நீண்ட கால விளைவுகளையும் யோசனை செய்து அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு வராமல் பயன்படுத்துவதுதான்." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 457. இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்