29.3..2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. "என்றும் மகிழ்வோம் எந்தமிழ் சிந்தனையில் " எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

29.3..2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. "என்றும் மகிழ்வோம் எந்தமிழ் சிந்தனையில் " எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர் வீர ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம்,துணைத் தலைவர் முனைவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர் .பன்னாட்டு தமிழுறவு மன்றம் தனசிங் மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் . கவிஞர் இரா .இரவி தலைமையில் கவிஞர்கள் ,இரா. கல்யாணசுந்தரம்,முனைவர் வரதராஜன் ,கு .கி . கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அ.அழகையா, , பா .பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,ச .லிங்கம்மாள், ச .கமலா சந்திரசேகர் ,அஞ்சூரியா க . ஜெயராமன் ,முனைவர் வீரைமைதீன்( நெல்லை ),வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன் ,சு..பாலகிருஷ்ணன்,முனைவர் பா .ஸ்ரீ வித்யாபாரதி ,சிறுமி ஸ்ரீஜா ,போ .சிவசத்யா மா .பரமானந்தம் ஆகியோர் கவிதை பாடினார்கள். பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் ச .கமலா சந்திரசேகர், முனைவர் வீரைமைதீன்,வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன்,சிறுமி ஸ்ரீஜா ஆகியோருக்கு தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல்,முனைவர் வரதராசன் எழுதிய நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் . கவிதாயினி ச .லிங்கம்மாள் எழுதிய "தாயின் கவிதைகள் " கவிதை நூலை வெளியிட்டனர் .நூல் ஆசிரியருக்கு பொன்னாடைப் போர்த்தி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் .வருகை தந்த அனைவருக்கும் கவிதை நூலை நண்கொடையாக வழங்கினார் . கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . படங்கள் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

கருத்துகள்