படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இளையராஜாவின் தன் மனைவியின்
மேல் கொண்ட காதல்!
அதற்கு என்ன என்று தானே
கேட்கிறீர்கள்..
விஷயத்துக்கு வருவோம்...
1985ல் இதய கோவில் என்று ஒரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்தது. இசை இளையராஜா தான். மொத்தம் 7 பாடல்கள், எல்லா பாடல்களும் செம ஹிட். ஒவ்வொரு பாடலை எழுதியதும் ஒவ்வொரு கவிஞர்கள்.
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல் …
இந்த பாடலை எழுதியது சாட்சாத் ராஜா தான். தன்னை ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தி கொண்டது இந்த பாடல் வழியே தான். அதற்கு பின் நம் ஆத்மாவை தொடும் பல பாடல்கள் அவர் இயற்றி இருக்கிறார்.
அதெல்லாம் சரி, இன்னும் திருமதி ராஜா பற்றி விஷயம் எதுவும் வரவேயில்லையே!
இதோ வரேன்!!
இந்த பாடலில் ஒவ்வொரு சரணத்திலும் தன மனைவி பெயர் வருமாறு எழுதியுள்ளார். திருமதி ஜீவா என்பது அவர் மனைவியின் பெயர்.
பல்லவியிலேயே வண்டியை செகண்ட் கியர் போட்டு தூக்கி விட்டார்:
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
சரணத்தை கவனியுங்கள்:
ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை!
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை!!
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இப்பொழுது இரண்டாவது சரணத்துக்கு செல்வோம்.
காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா!
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது?
சும்மா எப்போ பார்த்தாலும் ரெக்கார்டிங்! ரெக்கார்டிங்ன்னு பிரசாத் ஸ்டூடியோவிலேயே இருந்தால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு யார் ஹோம்வர்க் சொல்லி குடுக்கறதாம்?
எல்லா பாடத்திலயும் முட்டை வாங்கிட்டு வரான்! என்று ஒரு வேளை திருமதி ஜீவா அவர்கள் ராஜாவை அன்போடு கேட்டிருக்கலாம்.
கடைசி சரணத்தில் அம்மணிக்கு நாசூக்கா ஒரு செய்தி வேறு சொல்லி விடுகிறார்.
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
தனது முதல் பாடலை அவர் நினைத்திருந்தால் ஒரு ஜனரஞ்சக டூயட்டாகவோ, ஐட்டம் நம்பராகவோ எழுதி இருக்கலாம். தம் மனதில் இருக்கும் அன்பை, காதலை, பிரமத்தை, ப்யாரை எவ்வளவு பக்திபூர்வமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். காரணம் திருமதி ஜீவா மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
பிரின்ஸ் ஜுவல்லரிகாரர்கள் வேண்டுமானால் "காதலை சொல்லிடும் வழி தங்கம்!" என்று World Gold Council tagline ஐ தாங்களே யோசித்து எழுதிய வரிகள் போல விளம்பரப்படுத்தி நம் தலையில் மிளகாய் அரைக்கலாம்.
மேதைகள் தமக்கே உரிய பாணியில், அசால்ட்டா சொல்லி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள். சூட்சம புத்தியுளளவர்களுக்கு புரியும்.
மற்றவர்கள் "என்னடே பாட்டு இது? என்று கொட்டாவி விட்டு கேண்டினில் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
ஆனால் தனது மனைவியின் மேல்
உள்ள காதலை இளையராஜா பாடல்
சொல்லிய விதம் ஒரு கவிஞரால் மட்டும் தான் முடியும் .
நன்றி ரங்கா அவர்கள்
முகநூல் தொகுப்பு:பிரசாந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக