படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வணக்கம் ." முற்றிலும் தூய்மையான நிர்வாகம் என்பது எந்த அளவிற்குச் சாத்தியப்படும் என்பதைச் சீன சரித்திரம் விவாதிக்கிறது .ஒரு நாட்டில் அரசுக் கப்பல் முகமை கள்ளக் கடத்தலில் ஈடுபடுகிற தகவல் அரசருக்கு ஒற்றர்கள் மூலம் தெரிகிறது. மன்னன் தன் அமைச்சரிடம் ' இது போன்ற சம்பவங்கள் இருக்கத்தான் செய்யும். எலிகள் இருக்கும் எல்லா ஓட்டைகளையும் அடைக்க முடியாது. நான் இந்த முறைகேடு குறித்து விசாரிக்கப் போவதில்லை. சரக்குகள் குறித்த இலக்கிற்கு முழுமையான நிலையில் போய்ச் சேரும் வரை எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை .அதில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் அவர்களைத் தண்டிப்பேன். கடுமையான குற்றம் புரிகிறவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் ' ஓடை மிகவும் தூய்மையாக இருந்தால் அதில் மீன்கள் ஓடாது. அரசன் மிகவும் கூர்மையாக இருந்தால் அவனிடம் பணி புரிய யாரும் விரும்ப மாட்டார்கள். சிலரைக் கொஞ்சம் நீக்குப் போக்குடன் தான் நடத்த வேண்டும். எல்லாவற்றையும் சரி செய்ய நினைத்தால் மொத்தமும் பாழாகும். நிர்வாகமும் குளறுபடியாகும்' என்றார். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 355& 356.இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்