படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

அனைவருக்கும் வணக்கம் 😊🙏🏻 இன்று திங்கள்கிழமை (17.11.2025) தமிழக அரசின் கல்வி துறை சார்பில் அமைச்சர் சார்பாக பில்லர் ஆப் தமிழ்நாடு இன் எஜுகேஷன் விருது பெற்ற திருமதி. பிரேமலதா பன்னீர்செல்வம் ( தாளாளர் மகாத்மா குழுமம் ) அவர்களை கௌரவிக்கும் விதமாக மகாத்மா பாபா பில்டிங்கில் நடைபெற்ற நிகழ்வில் நமது அகவிழி பார்வையற்றோர் விடுதி (மூன்றாம் பார்வை அறக்கட்டளை) நிர்வாக அறங்காவலர் மு. ராமசாமி (எ) கோபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் எண்ணற்ற மாணவர்களும் , ஆசிரியர்களும் அனைத்து வகையான பயன்பெறும் அறக்கட்டளைகளும் பங்கு பெற்று திருமதி பிரேமலதா பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் பெற்றதோடு நமது மூன்றாம் பார்வை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சமூகப் பணியையும் பாராட்டினார்கள். மகாத்மா குழுமத்தின் தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம் அவர்களின் கல்விப் பணி மற்றும் சமூகப் பணி மென்மேலும் உயர அகவிழி பார்வையற்றோர் விடுதியின் மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு அகவிழி பார்வையற்றோர் விடுதி RUN BY (மூன்றாம் பார்வை அறக்கட்டளை ) முகவரி: NO.4/82/C , மூணூர், பொய்கைகரைப்பட்டி , அழகர் கோவில், மதுரை கிழக்கு மதுரை – 625301 தமிழ்நாடு

கருத்துகள்