படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் நடிகர் செந்திலின் மகன்.. செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம். அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது. இவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!

கருத்துகள்