படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வருசநாட்டு ஜமீன் கதை 🖊️📚 வடவீர பொன்னையா 💞 📚🖊️ ஒரு கதை தன்னை எழுதுபவரையும் வாசிப்பவரையும் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.கதையின் சிறப்பு என்பது கதைக்கருவை இணைப்பதில் இல்லை.கதையின் போக்கை இழைப்பதில் இருக்கிறது. எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை, எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை சிலருக்கு தான் இந்த காரியங்களை செய்ய முடிகிறது .அதுபோல வருசநாட்டு வரலாற்றுத் தடங்கலின் கதைகளை தேனி வட்டாரத்தில் பிறந்து தேனி மண்ணின் வாசனையையும் மக்களின் உணர்வுகளையும் அதே மொழி நடையில் சிறப்பாக எழுதிய பெருமை வடவீர பொன்னையா என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் பொன் சந்திரமோகன் அவர்களையே சேரும். 📚🖊️வருசநாட்டு மண் எண்ணிலடங்காத பொக்கிஷங்களையும் வளங்களையும் ரகசியங்களையும் கொண்ட பூமி. வருசநாட்டின் இயற்கை அழகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், மற்றும் வைகை ஆற்றின் பிறப்பிடமாக இருப்பது போன்றவை இம்மண்ணின் சிறப்பு. ஆனால் நிர்வாகத் திறமையில்லாத ஆட்சியாளர்களால் இந்த வளங்களும் புராதான பொக்கிஷங்களும் பம்பாய் பட்டேல்களாலும் பரங்கியராலும் கொள்ளயடிக்கப்பட்டது என்பதே உண்மை. 📚🖊️புத்தகத்தின் முகப்பு அட்டை புகைப்படமே ஜமீன்தாரரை பற்றி அறிய வழி அமைத்துக் கொடுக்கின்றது.நூலில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும், கதையை தேனி வட்டார மொழியில் எழுதி இருப்பதும் இக்கதைக்கான கூடுதல் சிறப்புகள் 💞 📚🖊️மன்னர் ஆட்சி காலத்தில் பாளையங்களாக இருந்தவை ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்களாக மாறின. இப்படி மாறிய 72 ஜமீன்களில் பெரிய ஜமீனமாகவும் அதிக வரி வசூல் செய்யும் ஜமீனாகவும் விளங்கியது கண்டமனூர் ஜமீன். அந்த ஜமீன் பளியன் சித்தன் என்னும் சித்தனின் சாபத்தால் அழிந்த கதைதான் இது. சித்தனின் சாபம் மட்டுமல்ல ஜனகம், செங்கமலம் என்ற நூற்றுக்கணக்கான பெண்களின் வேதனையால் கட்டப்பட்டது. ஜமீன் ஆண்டிவேலப்ப நாயக்கர் அவர் மகன் ஜமீன் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர் அவர் மகன் டி ஆர் எஸ் கதிர் வேல்சாமி பாண்டியன் அல்லது "மைனர் பாண்டியன் "என இந்த மூன்று தலைமுறையின் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதை ‌. இந்த கதையில் பல விஷயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது. 📚🖊️ இன்றும் தேனியில் உள்ள "வேலப்பர் கோவிலும், வருசநாட்டு மலைகளும் " பளியன் சித்தனின் நினைவைப் பறைசாற்றுகின்றது. 💞 " தோல்வி பெற்றவர்களால் தான் உங்களுக்கு வழி சொல்ல முடியும் "என்பது போல 100 வருடங்களுக்கு முன்பு தேனி வட்டாரத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த வருசநாட்டு ஜமீன் குடும்பம் ஒரு சித்தனின் சாபத்தாலும் ,பெண்களின் சல்லாபத்தாலும் சரிந்து போன சாம்ராஜ்யத்தின் கதை தமிழ் வம்சத்தின் அடையாளமாக இன்றும் மக்களால் பேசப்படுகின்றது.இதனை அடையாளப்படுத்திட பெரியவர்கள் மூலம் உரைநடையாகவும் பாடலாகவும் கேட்ட வருசநாட்டு ஜமீன் கதையை தேனி மண்ணின் வட்டார மொழியில் சிறப்பாக எழுதிய எழுத்தாளர் மரியாதைக்குரிய பொன் சந்திரமோகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும். 💐💐💐 என்றும் அன்புடன் நெல்லை திருமதி. கார்த்திகா ராஜா Msc MA முனைவர் பட்ட ஆய்வாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ❤️

கருத்துகள்