படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய வணக்கம் ." நார்ஸிஸிஸம் என்பது தன்னை அதிகமாக மதிப்பீடு செய்வது மாத்திரமல்ல, அடுத்தவர்களைக் குறைவாக எடை போடுவதும்தான். மாபெரும் மனிதர்கள் எப்போதும் எளிமையாகவும் பணிவாகவும் இருக்கிறார்கள். காலிக் குடங்களோ கதகளி ஆடுகின்றன. கழிவறைக்குச் சென்று வந்ததையே கலைமாமணி பட்டம் பெற்றதைப் போல, சாதனையாகச் சொல்லுகிற பல சராசரிகளைக் காணலாம். திருவள்ளுவர் சாமானியர்கள் தங்களைத் தாங்களே வியந்து கொள்வார்கள். மகத்தானவர்கள் எப்போதும் பணிவோடு இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். தன்னை அதிகமாக மதிப்பீடு செய்கிறவர்கள் எதேச்சையாகக் கிடைக்கிற வெற்றிகளைத் தன் ஆற்றல் என்று எண்ணிக் கொள்வார்கள் .பிறகு மிகப்பெரிய ஆபத்தில் இறங்கி அழிந்து விடுவார்கள். அதனால் தான் நம் பலங்களை மாத்திரம் ஆராயக்கூடாது. பலவீனங்களையும் பட்டியலிட வேண்டும். இலக்கியத்தின் உருவகமானாலும், வர்த்தக உலகத்திலும் பல நாடுகளை நடத்துபவர்களிடமும் நார்ஸிஸஸ்களைக் காண முடிகிறது. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 322.இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்