குரோம்பேட்டையில்
விஜிபியின் 184ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு
குரோம்பேட்டை, திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 184ஆம் திருவள்ளுவர் சிலையினை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்கள் முன்னிலையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் திரு.கோ.காமராஜ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இவ்விழாவில், தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி க.வசந்தகுமாரி, குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு.தெ.பொ.இளங்கோவன், தலைவர் புலவர் பாண்டியன், தொழிலதிபர் திரு. அருள்முருகன் A.இராமமூர்த்தி, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலாளர் டாக்டர் சேயோன், குன்றத்தூர் தெய்வத் திருக்குறள் பேரவையின் தலைவர் திரு.ம.குப்புசாமி, முனைவர் கோ.பெரியண்ணன் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக