2010 ஆம் ஆண்டில், சீனாவில் சின்ஹுவா செய்தி நிறுவனத்தால் பிடிக்கப்பட்ட இந்தப்
புகைப்படம் தாய்மையின் பாசத்தையும் விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டும் ஒரு பிம்பமாக பின்னர் மாறியது.
'நான் இங்கே இருக்கிறேன், நான் நேசிக்கும் என் உயிருக்காக"
என்ற தலைப்பில் படம் பிரசுரிக்கப்பட பின்னர் மக்கள் இந்த தாயை இனங்கண்டு
அவளிடம் பேசிய போது அவள் சொன்ன வார்த்தை இதயங்களைத் தொட்டது:
'என் முதுகில் நான் என் பொறுப்புகளைச் சுமக்கிறேன், என் கைகளில் என் எதிர்காலத்தை சுமக்கிறேன்." என்றாள்
இது ஒரு சிறிய வார்த்தை தான், ஆனால் அதில் பெரிய அர்த்தங்கள் உள்ளன. இந்த தாய் தனது இதயத்திலும் தனது முதுகிலும் பல சுமைகளை சுமந்த வண்ணம் வாழ்க்கை என்ற களத்தில் போராடும் போராட்டம் எவ்வளவு சவால் மிக்கது என்பதையும் தாய்மையின் வலிமையையும் இப்புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக