இனிய காலை வணக்கம் ." பழந்தமிழர்கள் நீரை மிகவும் நேர்த்தியாகப் பராமரித்தார்கள். நீர் நிலைகளுக்கு அவர்கள் அளித்த பெயர்களே அதற்குச் சான்றாக விளங்குகின்றன. அகழி, அருவி ,ஆறு, ஏரி, கடல் போன்றவை நமக்குப் பழக்கமான பெயர்கள் .கடலருகே தோண்டிக் கட்டிய கிணற்றுக்கு 'ஆழிக்கிணறு' என்று பெயர்... இப்படி 50க்கும் மேற்பட்ட பெயர்களை நீர் நிலைக்குத் தமிழர்கள் சூட்டியிருந்தார்கள். - திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப.25,26." .இந்த நாள் நம் மொழியில் நீர் நிலைகளுக்கு இருக்கும் 50க்கும் மேற்பட்ட பெயர்களைக் கற்றுக்கொள்ளும் இனிய நாளாக அமையட்டும்.முனைவர் வா.நேரு
கருத்துகள்
கருத்துரையிடுக