எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !    கவிஞர் இரா. இரவி !எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

என்ற நிலை வந்தாக வேண்டும்!


ஆரம்பக் கல்வி தமிழில் வேண்டும்

ஆலயத்தில் தமிழே ஒலிக்க வேண்டும்!


நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட வேண்டும்

நாட்டில் நடைமுறையில் தமிழே வேண்டும்!


தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை வேண்டும்

தமிழை தமிழாகவே பேசிட வேண்டும்!


தமிழ் படித்தோருக்கு முன்னுரிமை வேண்டும்

தமிழர்கள் யாவரும் ஓரணியாகிட வேண்டும்!


தமிழில் இலக்கியங்கள் பெருகிட வேண்டும்

தமிழில் பிறமொழிபெயர்ப்பு வந்திட வேண்டும்!


உலகின் முதன்மொழிக்கு உரிய இடம் வேண்டும்

உலக முழுவதும் தமிழ் பரவிட வேண்டும்!


இந்திய ஆட்சிமொழிகளில் தமிழும் வேண்டும்

இந்தியாவில் தமிழ் மதிக்கப்பட வேண்டும்!


ஊடகங்களின் தமிழ்க்கொலை நிறுத்திட வேண்டும்

ஊடகங்களில் நல்ல தமிழ் பேசிட வேண்டும்!


உலகப் பொதுமறையை தேசிய நூலாக்கிட வேண்டும்

உலகம் போற்றும் திருக்குறளை மதித்திட வேண்டும்!


இந்தியா முழுவதும் தமிழ் கற்பிக்க வேண்டும்

இந்தியை விட குறைந்ததல்ல தமிழ் உணர்ந்திட வேண்டும்!


வழக்கொழிந்த மொழிகளை விட்டுவிட வேண்டும்

வண்டமிழை என்றும் கொண்டாட வேண்டும்!


கருத்துகள்

கருத்துரையிடுக