உரைகல்லின் விழுதுகள் ****************************** டிசம்பர் 5 ========= --------------------------------------------------------------------------- கன்னிமாரா பொது நூலகம் தொடங்கிய தினம் டிசம்பர் 5

உரைகல்லின் விழுதுகள் ****************************** டிசம்பர் 5 ========= --------------------------------------------------------------------------- கன்னிமாரா பொது நூலகம் தொடங்கிய தினம் டிசம்பர் 5 --------------------------------------------------------------------------- சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். கன்னிமாரா பொது நூலகத்தை முதலில் தொடங்க திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு (Bobby Robert Bourke Baron Connemara ) என்பவர். இவர் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் கன்னிமாரா நூலகம். தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது. இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக மக்களே மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் ஆங்கிலேயர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இவருக்கு பின்வந்த ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ஆம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது. நூலகம் அமைய காரணமாக இருந்த கன்னிமாரா பிரபுவின் பெயரிலேயே இந்த நூலகத்திற்கு கன்னிமாரா என பெயர் சூட்டப்பட்டது. துவங்கப்பட்ட காலத்தில் ஆங்கில நூல்களே அதிகமாக இருந்தன. உலக நாடுகள் சிலவற்றின் வரலாறுகள் ஆங்கில ஆட்சி முறை பற்றிய குறிப்புகள் ஓவியங்கள் பைபிள்கள் இருந்துள்ளன. இந்நூலகத்தில் 1553ம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் அச்சிடப்பட்ட ஏராளமான அரிய நூல்கள் இருப்பது தான் தனிச் சிறப்பு. ஐநா சபையும் கன்னிமாரா நூலகத்தை தனது சேமிப்பு மையமாக பயன்படுத்துகிறது.ஐக்கிய நாடுகள் சபை வெளியீடுகள் மற்றும் ஆசிய வங்கி வெளியீடுகளுக்கான தகவல் மையமாகவும் இந்நூலகம் திகழ்கின்றது. இந்திய நூல்கள் வழங்கல் சட்டம் (Delivery of Books and Newspaper Act 1956) என்ற சட்டத்தின்படி இந்தியாவின் எந்த மூலையிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் செய்தித்தாள்களின் ஒரு பிரதியை இந்த நூலகத்துக்குக் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி நாள்தோறும் நூற்றுக்கணக்கான புதிய வெளியீடுகள் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன.இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகின்ற நூல்கள் இங்கே உள்ளன. இலக்கியம் வரலாறு கலை கலாசாரம் மருத்துவம் பொறியியல் அறிவியல் கணிதம் அரசியல் மற்றும் ஆராய்ச்சிகள் என அனைத்து துறைகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளவும் சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவுகிறது. கன்னிமாரா நூலகத்தில் 1553ம் ஆண்டு லத்தீன் மொழியில் அச்சிடப்பட்ட மிக பழமையான நூலும் 1578ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட கிரேக்க மொழியில் அச்சிடப்பட்ட பிளாட்டோவின் தத்துவங்கள் நூலும் அரபி மொழியிலிருந்து லத்தீன் மொழியில் 1678ம் ஆண்டு அச்சிடப்பட்ட நூலும் உள்ளன. 1978ம் ஆண்டு தமிழகத்தில் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்ட முதல் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்ட ஞானமுறைகளில் விளக்கம் என்ற நூலின் நகல் பிரதியும் 1608 ஆம் ஆண்டு லண்டனில் அச்சிடப்பட்ட பைபிள் பிரதி ஒன்றும் இங்கே உள்ளது. அப்போது பருத்தி இழைகளால் தயாரிக்கப்பட்ட காகித்தில் இந்த நூல் அச்சிடப்பட்டு உள்ளதால் இன்னமும் நல்ல தரத்தில் உள்ளது. வீரமா முனிவரால் 1822ம் ஆண்டு எழுதப்பட்ட செந்தமிழ் இலக்கண நூலும் தமிழ் ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள நூலும் மற்றும் ஏராளமான அரிய நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பெரிய புத்தகம் என்பது இரண்டரை அடி நீளம் இரண்டு அடி அகலம் உள்ள அட்லஸ் ஆகும். விக்டோரியா மகாராணிக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட இந்திய இலங்கை வரைபடம் இதுவும் இந்த நூலகத்தில் உள்ளது. கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது. பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. கன்னிமாரா நூலகத்திற்கு தினசரி 200 நாளிதழ்கள் வருகின்றன. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் கன்னிமரா நூலகம். தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்று..முருகுவள்ளி

கருத்துகள்