மனதில் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : சாகித்ய அகதெமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ! மேலாண் மறைநாடு-626 127. விருதுநகர் மாவட்டம், செல் : 99426 10700. ****** நாள் : 12-11-2010
மனதில் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
சாகித்ய அகதெமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி !
மேலாண் மறைநாடு-626 127. விருதுநகர் மாவட்டம்,
செல் : 99426 10700.
******
நாள் : 12-11-2010
மனதில் ஹைக்கூ என்ற கவிதை நூலை வாசித்து விட்டேன்.
திருக்குறள் மாதிரியான தலைப்பு அத்தியாயங்களுக்குள் சில சில ஹைக்கூ கவிதைகள். வித்தியாசமான அடுக்குமுறைமை.
கோடாரியை /
கூர்தீட்டுகையில்/
வருந்தியது கைப்பிடி.
மேடுகளைத் தகர்த்து/
பள்ளம் நிரப்பும் சமத்துவம்/
பொதுவுடைமை.
வீட்டைப் பிடித்த நோய்/
பேருந்திற்கும் தொற்றியது/
தொல்லைக்காட்சி.
உங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களையே பாடுபொரு-ளாக்குகிற ஹைக்கூகளில் ஒரு சமுதாயப் பார்வையையும் முன் வைக்கிறீர்கள்.
ஹைக்கூ பற்றியே ஹைக்கூவா? ஆச்சரியம் தருகிற முயற்சி.
கணினி யுகத்தின் /
கற்கண்டு/
ஹைக்கூ..
மூன்று வரி/
முத்தாய்ப்பு/
ஹைக்கூ.
இரண்டுமே சுவையாக இருக்கிறது. ஹைக்கூ, கற்கண்டா ... மூலிகையா? சுவை மட்டும் தருமா? நலமும் தருமா?
பொக்ரான் சோதனை/
சந்திராயன் பெருமை/
தீண்டாமை சிறுமை.
உண்ணும் உணவிலும்/
உடுக்கும் உடையிலும்/
காட்டுவாயா தீண்டாமை!
சாட்டைச் சுழற்சியாக கவிதைகள். ‘வல்லரசு’ பெருமை மயக்கத்தில் இருக்கிற இந்தியாவின் சமூகப் பண்ணை சரியாகவே சுட்டிக் காட்டுகிறீர்கள்.
அரசாங்கம் நடத்தும்/
அவமானச் சின்னம்/
டாஸ்மாக் !
விதவைகளின் எண்ணிக்கை/
விரிவாக்கம் செய்யுமிடம்/
டாஸ்மாக் !
நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல், உள்மன உலக தரிசனங்களில் ஒதுங்கி ஒதுங்கி மிதக்கிற கவிதைகளுக்கு மத்தியில் வீதிப்புழுதியை உழுகிற உங்கள் கவிதைகள்.
சகாப்தம்/
சாகாத வரம்/
காமராஜர் !.
நல்ல வார்த்தைச் சித்திரம்.
விவேக வரிகளால்/
வீரம் விதைத்தவர் !
மகாகவி !
யுகம் கடந்து வாழும்/
யுக கவி/
மகாகவி !.
மகாகவி பாரதிக்கு மிகப் பெரிய வணக்கமும், ராஜமரியாதையும் செய்கிற கவிதைகள்.
பாமரனுக்கும் புரிந்திட/
பா படித்தவர்/
மகாகவி !
இக்கவிதை தான் பாரதிக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.
சங்க இலக்கியத்தைச்/
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்/
கவியரசு !
கண்ணதாசனுக்கு சிறந்த பொன்
கருத்துகள்
கருத்துரையிடுக