உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்...
அவர் ஒருநாள் #பூங்காவில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.
*#டால்ஸ்டாய்* அருகே வந்து, அவரைப் பார்த்து "என்னோடு விளையாட வர்றீங்களா..?: என்று கேட்டாள்.
அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், "நான் போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அதைக் கேட்ட டால்ஸ்டாய், "உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று" என்றார்.
அதற்கு அந்தச் சிறுமி, "நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் ஷர்மிஸ்டாவுடன் விளையாடினேன் என்று" என்றாள்.
உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்...!
=================
ஆம்...
யாரும் யாரைவிடவும் ,
உயர்ந்தவரென்றோ !
தாழ்ந்தவரென்றோ !
மதிப்புமிக்கவரென்றோ !
அறிவானவரென்றோ !
அழகானவரென்றோ !
நிறமானவரென்றோ !
படித்தவரென்றோ !
பணக்காரரென்றோ !
ஏழையென்றோ !
நீங்கள் உங்களையும்,
நீங்கள் மற்றவரையும் நினைத்துவிடாதீர்கள்.
இப்புவிப் பந்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோவோரு சிறப்புக்கு உறியவர்கள்தான்.
வான்குருவியின் கூடு
வல்லரக்கு,
தொல்கரையான்,
தேன், சிலம்பி,
யாவருக்கும்
செய்யரிதாலால்
யாம் பெரிதும்
வல்லோமேயென்று
வல்லமை பேச வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்று எளிதாமே !
இச்சமூகத்தால் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத...
ஏழைகள்,
படிக்காத பாமரர்கள்,
ஆங்கிலம் தெரியா தாய்மொழி இயல்புடையவர்கள்,
மற்றவரால் கவரப்படாத,
மற்றவரின் கண்களை வசீகரித்து சுன்டி இழுக்காத,
கருத்தநிற மேனியை கொண்டவர்கள்,
எடுப்பாய் மினுக்காய் வனப்பாய் உடலமைப்பில்லாதவர்கள்,
வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) யாவருக்கும், உங்களைப்போலவே,,,,,,,!
சுயமரியாதை
கோபம்
உடல் வலி
மகிழ்ச்சி
பசி
உறக்கம்
பிரிவின் வலி
சுடுசொல்லின் வலி
இழிசொல்லின் வலி
புறக்கணிப்பின் வலி
போன்ற.......,
தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.
மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால், நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் .... நெட்டித்தள்ளி வதைசெய்து விடாதீர்கள்!
உலக அமைதிக்கு முதலில் நம்முடைய தன்முனைப்பு என்ற ஈகோவை (ego) கைவிடவேண்டும். ஈகோவால் உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றிவிடுகிறது. எல்லா அமைதி கெடலுக்கும் ஈகோவும், பிறரிடமிருந்து எதிர்பார்த்தலுமே காரணமாயுள்ளது.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
படித்ததில் பிடித்தது.
🌹💐👍
கருத்துகள்
கருத்துரையிடுக