நல்லிணக்க கவிஞர் & பாடகர் 🇮🇳 ., * இசைத்தமிழுக்கு தன் ... * எனது இலட்சியத்தில் பதிவு . )

5.8.2023 அன்று , மதுரையில் நடந்த விழாவில் ... 💐 இசைத்தமிழுக்கு , தன் இயல் உரையால் எழுச்சியூட்டிய 🌹 இறையன்பு அவர்களின் ஏற்புரை பேச்சுக்கு நன்றிகள் சொல்வோம் !! -- 🏵️🌻💐🙏🧚🏽‍♀️🌻🏵️ -- 5.8.2023 அன்று மாலை .. மதுரை தமிழிசைச் சங்கம் , ராஜா முத்தையா மன்றத்தில் .. மகிழ் நிறைவுடன் நடந்த ராஜா முத்தையா செட்டியாரின் .. மதிப்புமிகு 119 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் .. மரியாதைமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி .. 🌻 அம்மா ஸ்ரீமதி அவர்களின் சிறப்பான தலைமை உரையோடு .. அதனை தொடர்ந்து , * முத்தையா செட்டியார் நினைவு * பொற்கிழியை .‌. அம்மா ஸ்ரீமதி அவர்களிடமிருந்து பெற்ற முனைவர் இறையன்பு .. அவர்களின் இசை விழா ஏற்புரை மிகவும் எழுச்சியானது ! .. 🏵️ ஆம் ! இசையே இல்லாமல் , இசைத்தமிழை , பல்வேறு இசைக் கதைகளோடு - தன் .. இலக்கியப் பேச்சால் ( ! ) உணர்ச்சியுடன் உரைத்தது மிகவும் அருமை ! .. இசையின் வெளிப்பாட்டை , நம் நாடு , வெளிநாடு என்றில்லாமலும் ( ! ) .. இசையின் உச்சியிலிருந்த ஹரிதாஸை , அவரது மாணவர் தான்சேனையும் , .. இசையை , புல்லாங்குழலால் இசைத்த புத்தரின் அதிசய நிகழ்வையும் ( ! ) .. இந்த ஜால்ராவை கண்டுபிடித்தது யாரென்ற ( ? ) நகைச்சுவையும் ( மிகவும் ) அருமை !! 🙏 தமிழிசைச் சங்கத்தின் மூத்த அறங்காவலர் மோகன்காந்தி அவர்கள் .‌. தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் இறையன்பு அவர்களை வரவேற்றபோது .. தன்னுரையில் மூச்சுவாங்கப் பேசி அசந்தார் ! அசந்து வியந்தபோது ( ! ) .. தமிழிசைச் சங்க * ராஜா முத்தையா மன்றமே * வியந்தது !! 💐 ஆம் ! இறையன்பு எனுமுயர் தமிழ்நாடு அரசின் ( ஓய்வு ) தலைமைச் செயலாளர் .. இசையை , இசைத்தமிழை , முழுக்க இசையை பற்றியே பேசி ( ! ) .. இசைத்தமிழ் காவலர் ராஜா முத்தையா செட்டியார் அவர்களை - தன் .. இயல் ஏற்புரையால் பெருமைப்படுத்திய , இறையன்பு அவர்களுக்கு நன்றிகள் சொல்வோம் !! -- 🙏 இசைத் தமிழையும் , இசைத்தமிழ் காவலரையும் வணங்கி , வாழ்த்துக்களூடன் , 💐 மதுரை இலட்சியம் சிதம்பரம் . ( 🇮🇳 தேசிய நல்லிணக்க கவிஞர் & பாடகர் 🇮🇳 ., * இசைத்தமிழுக்கு தன் ... * எனது இலட்சியத்தில் பதிவு . ) --- 🙏🙏🙏🌻🙏🙏🙏---

கருத்துகள்