நூலகம் ! கவிஞர் இரா .இரவி

நூலகம் ! கவிஞர் இரா .இரவி அகம் தூய்மையகம் நூலகம் ! அறிவு வளர்க்கும் அற்புத இடம் நூலகம் ! பண்பாடுப் போதிக்கும் பயனுள்ள இடம் நூலகம் ! அறவழிப்படுத்தும் அழகிய இடம் நூலகம் ! அறிவாளிகள் இருக்கும் அறிவார்ந்த இடம் நூலகம் ! அமைதிப் படுத்தி மதி வளர்க்கும் இடம் நூலகம் ! விலைமதிப்பற்ற நூல்களின் வசிப்பிடம் நூலகம் மறைந்த தலைவர்கள் மறையாமல் வாழுமிடம் நூலகம் ! புரட்டப் புரட்ட புத்திப் புகட்டுமிடம் நூலகம் ! எடுத்துப் படிக்க இனிமை கூட்டுமிடம் நூலகம் வயது பேதமின்றி வாசகரை உயர்த்துமிடம் நூலகம் ! சாதி மத பேதமின்றி சமத்துவம் கற்பிக்குமிடம் நூலகம் ! அரசுப்பணி ஆட்சிப்பணி கிடைக்கக் காரணம் நூலகம் !

கருத்துகள்