ுத்தகம் கவிஞர் இரா .இரவி

புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாக வாழ வைப்பது புத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்கு வித்திட்டது புத்தகம் ! பண்பாடு வளர்த்து பண்பைப் போதிப்பது புத்தகம் ! அறிவியல் அறிவை அகிலம் பரப்பியது புத்தகம் ! பயனுள்ள கண்டுபிடிப்பு வாழ்வின் பிடிப்பு புத்தகம் ! புரட்சியாளனை உருவாக்கியது புத்தகம் ! அகிம்சைவாதியை வளர்த்தது புத்தகம் ! பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசக் காரணம் புத்தகம் ! பேரறிஞர் புகழ்ப் பெறக் காரணம் புத்தகம் ! அகமும் புறமும் சுத்தம் செய்வது புத்தகம் ! அகம்பாவம் ஆணவம் அகற்றுவது புத்தகம் ! பணிவு கனிவு தெளிவு வழங்குவது புத்தகம் ! அறிவை விரிவு செய்து அறியாமையை அகற்றுவது புத்தகம் ! நூலகம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அகம் தூய்மையகம் நூலகம் அறிவு வளர்க்கும் அற்புத இடம் நூலகம் பண்பாடுப் போதிக்கும் பயனுள்ள இடம் நூலகம் அறவழிப்படுத்தும் அழகிய இடம் நூலகம் அறிவாளிகள் இருக்கும் அறிவார்ந்த இடம் நூலகம் அமைதிப் படுத்தி மதி வளர்க்கும் இடம் நூலகம் விலைமதிப்பற்ற நூல்களின் வசிப்பிடம் நூலகம் மறைந்த தலைவர்கள் மறையாமல் வாழுமிடம் நூலகம் புரட்டப் புரட்ட புத்திப் புகட்டுமிடம் நூலகம் எடுத்துப் படிக்க இனிமை கூட்டுமிடம் நூலகம் வயது பேதமின்றி வாசகரை உயர்த்துமிடம் நூலகம் சாதி மத பேதமின்றி சமத்துவம் கற்பிக்குமிடம் நூலகம் அரசுப்பணி ஆட்சிப்பணி கிடைக்கக் காரணம் நூலகம் கடன் கேட்காத நல்ல நண்பன் நூல் !

கருத்துகள்