என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூலை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து உதவிய பேராசிரியர் மரியதெரசாவின் உலகசாதனை.உலகச் சாதனை நிகழ்ச்சி செய்த

என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூலை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து உதவிய பேராசிரியர் மரியதெரசாவின் உலகசாதனை.உலகச் சாதனை நிகழ்ச்சி செய்தி. முனைவர் ஆசிரியர் கவிஞர் மரிய தெரேசா அம்மா அவர்களின் 223 - நூல்கள் படிக்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர் பேரா. சே. பானு ரேகா அவர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்காற்றியவர்கள் பேரா. சே. பானு ரேகா - ஆற்காடு மற்றும் முனைவர் மரிய தெரேசா - சென்னை. இவர்கள் இருவரும் 10.06.2023 சனிக்கிழமை காலை 08:35 மணிக்குத் துவங்கி 11.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணிக்கு 223 நூல்களையும் படித்து முடித்தனர். இதனைச் சிறப்பாகக் கருதி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் முனைவர் உலகச் சாதனையாளர் செ. வெங்கடேசன் பாண்டிச்சேரி அவர்கள் உலகச் சாதனை நிகழ்ச்சி என்று அறிவிப்பு செய்து உலகச் சாதனையாளர் என்று அங்கீகாரம் அளித்துள்ளார். செய்தியளிப்பு: - நட்புடன், பேரா. சே. பானு ரேகா.

கருத்துகள்