உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி ! தானத்தில் சிறந்தது ரத்த தானம் ! தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் ! குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் ! விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி ! விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் ! பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி ! பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி ! நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி ! நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி ! ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் ! ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் ! ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல ! ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல ! பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் ! குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் ! பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் ! பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு ! இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் ! இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் ! உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் ! உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் ! உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி ! இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி ! தர்மம் தலை காக்கும் என்பார்கள் ! தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை ! மனிதனை மனிதன் காப்பது கடமை ! மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் ! கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை ! கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை ! தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று ! பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று ! தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று ! தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று ! ------------------------------------------------------ சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி ! ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு ! மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம் மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் ! சாதி மத பேதமின்றி அனைவரிடமும் சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் ! தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம் தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் ! பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம் தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் ! புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம் புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் ! மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம் மனதார வழங்கும் தானம் ரத்ததானம் ! பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம் பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் ! அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம் அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் ! தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் ! விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம் வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் ! இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம் ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் ! சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம் சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் ! வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம் வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் ! ------------------------------------------------------ ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி ! தன் உடலில் ஓடும் இரத்தம் தானம் தந்ததால் கூடும் இரத்தமானது ! உயிர் காத்து உதவும் இரத்தமானது ! உதவியதால் கூடும் இரத்தமானது ! கொடுத்திடக் கூடும் இரத்தமானது ! கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது ! கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் ! கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் ! வழங்கிட ஊறும் இரத்தமானது ! வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு ! வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் ! வளமும் நலமும் தரும் இரத்ததானம் ! கர்ணனை நினைவூட்டும் காரணியானது ! கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது ! சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது ! சகோதரத்துவம் மனதில் விதைத்தது ! நான் என்ற அகந்தை அகற்றியது ! நாம் என்ற அன்பை உணர்த்தியது ! கொடுத்து சிவந்த கரம் என்பர் ! கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் ! பலர் இன்று உயிர் வாழ்வது ! சிலர் தந்த இரத்த தானத்தால் ! பல நேரங்களில் உயிர் காத்தது ! பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் ! இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு ! இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு ! உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் ! உலகம் போற்றும் தானம் இரத்ததானம் ! பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் ! பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் ! மனிதம் காக்கும் இரத்ததானம் ! மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் ! உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் ! ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் ! யாருக்குப் போகும் என்பது தெரியாது ! யாருக்காவது உறுதியாகப் போகும் ! பெற்றவர் மனதார வாழ்த்துவார் ! பெருங்கவலை விடுத்து வாழ்வார் ! சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து ! சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் ! மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் ! மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் ! ------------------------------------- .

கருத்துகள்