இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் ! கவிஞர் இரா .இரவி !

இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி ! புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும் புலம் மறக்காமல் வளர்க்கும் நம் தமிழ் மொழி ! முதல்மொழி வளர்ச்சி கண்டு ஐ .நா .மன்றமே ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ் வளர்ச்சிக் கண்டு ! அழிவில்லை என்றும் நம் தமிழுக்கு அறிவிப்போம் அகிலம் முழுவதும் காணலாம் இணையத்தில் தமிழ் ! கதை ,கவிதை ,கட்டுரை ,மதிப்புரை அனைத்தும் கண்டு ரசிக்கலாம் எழுதி மகிழலாம் இணையத்தில் ! பதிவிட்ட சில நொடிகளில் எங்கும் காணலாம் பரந்து விரிந்த உலகம் முழுவதும் வாசிக்கலாம் ! விஞ்ஞான வளர்ச்சியான இணையத்தின் பயனை விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன் ! பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர் தொடங்கியவன் பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியவன் நான் ! ஐந்து லட்சம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர் அனைத்து முன்னணி இணையங்களிலும் இணைப்பு ! தமிழன் இல்லாத நாடே இல்லை உலகில் தமிழர்களின் இணைப்புப் பாலம் இணையத்தில் தமிழ் ! இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு ! இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை இதயத்திலும் பதிந்ததால் பெற்றது உலகப் புகழ் ! இணையத்தில் தமிழ் வளர்க்கும் தினமணி கவிதை மணிக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ! தினமணி இணை(த)யத்தில் வாழும் நம் தமிழ் திக்கெட்டும் புகழ் பரப்பும் தித்திக்கும் தமிழ் பரப்பும் ! Www.kavimalar.com

கருத்துகள்