படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

அமுதம் புக்ஸ் வழங்கும் சிறந்த மனிதநேய அறிவியல் நூலின் சில வரிகள் வாசிப்பை சுவாசிப்பவர்களுக்காக....* *மனிதன் மாறிவிட்டான்.* ^^^^^^ ^^^^^^ ^^^^^^ ^^^^^ ^^^^^^ *மனிதன் தினமும் எழுச்சி பெற்று மாறி வருகிறான். ஆனால் மனிதம்...? ஒவ்வொரு நொடியும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.* *இந்த மன வருத்தமே தற்போது உலகில் விஞ்சி நிற்கிறது.* *இரக்கம் ஏன் தேய்ந்து போகிறது...? இதயம் ஏன் தொய்ந்து போகிறது...?* *இந்த கவலை சமூக அக்கறை உள்ள பலரிடமும் மேலோங்கி நிற்கிறது.* *இந்த காலம் கெட்டுப்போன புலம்பல் காலம் தோறும் இருக்கிறது. இது வெறும் புலம்பல் மட்டும் தானா...?* *மனிதன் மட்டும் ஏன் இப்படி மனித நேயமின்றி மாறிப்போனான்...?* *நம் உடலில் லேசாக யாராவது கீறினால் நம் குரங்குத்தனம் மிக வேகமாக வெளிவந்து விடும்.* *நம் நாகரீகம் என்பது மேம்போக்கான அழியும் முகப்பூச்சு என்றும்...* *குரங்கிடம் இருக்கும் குரங்குத்தனத்தை காட்டிலும் மனிதனிடம் இருப்பது சற்றே அதிகம் என்கிறார் அறிவியல் அறிஞர் நீட்ஸே.* *குரங்கின் அதன் செயல்பாடு எல்லைக்குட்பட்டது. ஆனால் மனிதனின் குரங்குத்தனம் எல்லையற்றது என்கிறார்.* *மனிதனின் வன்மமும் சுயநலமும் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையவை.* *சிறந்தவை நீடிப்பது இல்லை. தகுந்தவையே தம்மை தக்க வைத்து கொள்கின்றன என்ற பரிணாம வளர்ச்சி தத்துவத்தை சொல்கிறார் டார்வின்.* *மனித இனத்தை மூன்றாவது சிம்பன்சி என்கிறார் மற்றொரு அறிவியல் அறிஞர் ஜேரட் டைமன்ட்.* *உடலே மனதை பாதிக்கிறது. மனம் சூழ்நிலையை பாதிக்கிறது. ஆனால் உடலை பாதிப்பது மரபுவழிச் சரடு.* *மனிதன் மாறிவிட்டான் என்று சொல்ல காரணம் உடலமைப்பு மனம் ஆகியவற்றின் பெரும் மாற்றங்களால் தான் என பதிவு செய்திருக்கிறார்.* *இன்று மனதின் பல பிரச்சினைகளுக்கு நம் ஜீன்களே காரணம். அந்த ஜீன் இருப்பவர்கள் மதுவை முகர்ந்து விட்டால் மூழ்கி விடுவார்கள் தப்பிக்க இயலாது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர் இறையன்பு.* *ஏறத்தாழ 240 பக்கங்களில் உடலின் சூட்சமங்களை அறிவியல் பார்வையில் மிக அனாயாசமாக தமிழ்கூறும் நல்லுலகிற்கு விருந்து படைத்திருக்கிறார் நூலாசிரியர் இறையன்பு.* *அறிவியல் நூலை வாசிக்கும் அனைவருக்குமான சுவாரஸ்யமான நடையில் எழுதுவது வெகு சிரமம். ஆனால் இவருக்கோ இது கைவந்த கலை.* *நூலில் 25 கட்டுரைகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொது அறிவு நூறு கேள்விகளை செதுக்கி இருப்பதும் தான் வாசித்த நாற்பது நூல்களையும் அறிமுகம் செய்திருப்பது நூலின் கூடுதல் சிறப்பு.* *அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நேசிக்க வேண்டிய நூலிது மறவாதீர்கள்!* *நல்ல நூல்களின் நந்தவனம் அமுதம் ஒன்றே. இது நகரின் அடையாளம்.* *AMUTHAM BOOKS, MTP.* *98430 24980 : 94864 11900*

கருத்துகள்