தினம் ஒரு புத்தகம்
நமக்குள் சில கேள்விகள்
இறையன்பு
தினத்தந்தி பதிப்பகம்
புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம்
நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் கேள்விகளை வெளிக் கொணரும் முயற்சியாக கேள்வியும் பதிலும் அவராகவே 46 சுவையான, சிந்திக்கத் தூண்டும் கேள்வி பதில் பகுதிகளை உள்ளடக்கிய புத்தகம் இந்நூல்.
நூலில் நான் இரசித்தவற்றில் சில
மென்று துப்புகிற பாக்கிற்கும்,
நின்று பலன்தரும் தேக்கிற்கும்
வித்தியாசம் உண்டு. இனிமை சேரவும், இதயத்தில் இடம் பெறவும் பொறுமை தேவை.
கயிற்றில் நடப்பவர்கள் பற்றி
விழுந்தால் எழுவதற்கு வாய்ப்பு இல்லாதபோது விழிப்புணர்வு உச்சத்தை அடைகிறது என்பதை அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அரசுப்பணிகளில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
சிகிச்சை இல்லாத போதைப் பொருள்
புகழ்
போட்டி, பொறாமை வேறுபாடு
அடுத்தவர்களை விட நாம் உயரமாக இருக்கவேண்டும் என முனைவது போட்டி.
தன்னைவிட மற்றவர் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை.
செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை.
ஆசிரியர்கள் பற்றி
அதே இடத்தில் இருக்கும் வில்தான் விரைந்து செல்லும் அம்பை எய்கிறது. ஆசிரியர்கள் வில்லாக இருக்கிறார்கள். மாணவர்கள் அம்பாகிறார்கள்.
யார் ஜெயிக்க வேண்டும்?
ஜெயித்ததை பெருமையாக நினைக்காதவர்கள்.
உயர்ந்த உணவு எது?
நாம் நேர்மையாக சம்பாதித்த காசில் சாப்பிடுவது.
பெருந்தன்மையின் இலக்கணம்
செய்ததைச் சொல்லிக் காட்டாமல் இருப்பது
எழுச்சி, எண்ணிக்கை எது முக்கியம்?
எழுச்சி மிக்கவர்களின் எண்ணிக்கையே புரட்சியைத் தீர்மானிக்கிறது. உலகைப் புரட்டிப் போடுகிறது.
ஒரு புத்தகத்தின்மீது வெறுப்பு வர என்ன செய்ய வேண்டும்?
பாடபுத்தகமாக்கி பரீட்சை வைத்தால் போதும்!
சிறந்த கல்வி எது?
சிந்திக்கச் சொல்லித் தருவது
கேள்விகளால் ஒரு வேள்வியை நடத்தியிருக்கிறார்
படிப்பதோடு பயன்படுத்தவும் வேண்டியவை
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக