தகைசால் தமிழர் விருது பெற்ற திரு. நல்ல கண்ணு அவர்களைப்பற்றி* :-
1.அரசால் வழங்கப்பட்ட விடுதலை போராட்ட தியாகி பென்ஷனை வாங்க மறுத்து விட்டார்.
2.அவர் வசிக்க இலவசமாக ஒரு வீட்டை அரசு அளித்தும் இன்றுவரை அதற்கு வாடகை செலுத்தி வருகிறார்.
3.கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதுடன் வழங்கிய ரூ. 100000/-பணத்தை விவசாய சங்கத்திற்கு அளித்தார்.
4.ஒரு சாதிக்கலவரத்தில் அவர் மாமனார் கொல்லப்பட்டார். அதற்காக வழங்கப்பட்ட இழப்பீடு தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்விக்காக கொடுத்தார்.
5.அவர் சார்ந்த கட்சி அவரின் 80வது வயதில் அவருக்கு அளித்த ஒரு கோடி ரூபாய் மற்றும் காரை கட்சிக்கே திருப்பி வழங்கி விட்டார்.
6.இன்று தமிழகஅரசு வழங்கிய பத்து இலட்சம் ரூபாயுடன் மேலும் ரூ. 5000/-சேர்த்து முதல்வர் நிதிக்கு அளித்து விட்டார்.
மிகவும் எளிமையானவர். நேர்மைதான் இவரின் சொத்து.
இவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று பெருமைப்பட வேண்டும்.
இவர் சாதாரண மனிதர் இல்லை. இவர்தான் உண்மையிலேயே *மாமனிதர்*🙏🙏🙏
*இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்*
🙏🙏🙏🙏🙏🙏🙏


கருத்துகள்
கருத்துரையிடுக