"வழிகாட்டி மனிதர்கள்" அறக்கட்டளையின் சார்பில் மதுரை சேவாலயம் பாலர் இல்லத்தில் விடுதலை அமுதப்பெரு விழா நடந்தது .வழிகாட்டி மணிகண்டன் அவர்கள் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி கட்டுரைப் போட்டி ,ஓவியப்போட்டி .பேச்சுப்போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் .கவிஞர் இரா .இரவியும் கலந்து கொண்டு சிறப்பித்தார் .நாள் 14.8.2022
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின 75வது சுதந்திர தின அமுதவிழா செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக இல்ல நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று
இந்திய தேசிய கொடியை நாம் ஏற்றிவைத்தது மிக்க மகிழ்ச்சி.
இல்லத்தின் தலைமை நிர்வாகி திரு.சீனிவாசன் முன்னிலையில் பொறுப்பாளர் திரு.கார்த்திக் ஒருங்கிணைப்பில் முன்னதாக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினோம்.
போட்டியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத மாணவர்கள் அனைவருக்கும் பேனா மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நண்பர்கள் கவிஞர் திரு.ரவி, கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் திரு.செந்தில்குமார், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் திரு.ஷேக்மஸ்தான், சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் திரு.கிரேசியஸ், மக்கள் தொண்டன் திரு. அசோக்குமார், திரு.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று களப்பணியிலும் ஈடுபட்டனர்.
---'வழிகாட்டி' மணிகண்டன்.
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.
மதுரை.
9791655104.













கருத்துகள்
கருத்துரையிடுக