விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி!
வாழ்கிறான் கொடையில்
வள்ளல் கர்ணன்
விழிக்கொடை !
வந்தது பார்வை
பார்வையற்ற இருவருக்கு
விழிக்கொடை !
இறந்தப் பின்னும்
இறக்காத விழிகள்
விழிக்கொடை !
மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
மனிதர்களுக்கு வேண்டும்
விழிக்கொடை !
கருவிழிகள்
அகற்றியது இருள்
விழிக்கொடை !
உயிர்ப் பிரிந்தும்
உயிர்ப் பெற்றது
விழிக்கொடை !
உடல் மாறியும்
உயிர் உள்ளது
விழிக்கொடை !
குறையை நீக்கி
நிறைவாக்கியது
விழிக்கொடை !
மரிக்கவில்லை மனிதம்
மனிதரில் புனிதம்
விழிக்கொடை !

கருத்துகள்
கருத்துரையிடுக