சிறுகதை மன்னர் தென்னரசு அவர்களின் தம்பி அமரர் திருஞானம் புகழ்வணக்கம் நிகழ்வு. இடம் மதுரை வடக்கு மாசி வீதி ,மணியம்மை பள்ளி படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் ககை வண்ணம்.

திராவிடக் கழகப் போராளி சிறுகதை மன்னர் எஸ்எஸ். தென்னரசு அவர்களின் இளவல் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றப் புரவலாராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய நினைவில் வாழும் எஸ்.எஸ். திருஞானம் அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் - புரட்சிக்கவிஞர் மன்றம் இணைந்து நடத்திய வீரவணக்கம் - புகழஞ்சலி நிகழ்ச்சி10.07.2022 அன்று மாலையில் மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என. எம். மாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினர் திரு. கோ. தளபதி அவர்கள் படத்தை திறந்து - மாலை அணிவித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். பேராசிரியர் திரு. இ.கே. இராமசாமி புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு. பி. வரதராசன் கவிஞர் திரு. இரா இரவி வழக்கறிஞர் திரு. இராம. வைமுத்து அக்ரி கே.பி.டி. கணேசன் தொழிற்சங்கத் தலைவர் திரு. மகப்பூப்ஜான் திரு. டி.வி. அழகர் பார்வர்டு பிளாக் தலைவர் திரு. பி.என். அம்மாசி ஆசிரியர் திரு. மோகனக்கண்ணன் செயலர் திரு. கே.வி. இராமகிருட்டினன் பொருளாளர் திரு க.வெ. நெடுஞ்சேர லாதன் துணைச் செயலர்கள் திரு. கரு. ஆறுமுகம் திரு. மு. வெங்கடேசுவரன் துணைத் தலைவர் திரு. சே. அழகுசுந்தரம் திரு. லெ. வெள்ளைச்சாமி திரு. முத்திருளன் திரு. ரெ. கார்த்திகேயன் திரு. லெ. முருகேசன் திரு. செல்வக்குமரன் திரு. குமார் திரு. வெள்ளைத்துரை திரு. மா. கணேசன் திரு. ஏ. இளங்கோவன் திரு. எஸ். கண்ணண் மாவட்ட ஆட்சியர் அலுவலக திரு சுப்பையா மற்றும் புரவலர் எஸ்.எஸ். தென்னரசு குடும்பத்தினர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர். முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள்