மருத்துவர் தினம் நல்வாழ்த்துகள் மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

மருத்துவர் தினம் நல்வாழ்த்துகள் மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! இறவாமல் செய்ய முடியாவிடினும் இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் ! ஆறு நூறு வயது பேதமின்றி அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் ! கற்ற மருத்துவக் கல்வியை கடைசிவரை மறக்காதவர்கள் ! ஓய்வு பெரும் வயதானாலும் ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் ! வாழையடி வாழையென மருத்துவ வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் ! முகம் சுளிக்காமல் எந்நேரமும் முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் ! நேரம் காலம் பாராமல் எந்நேரமும் நேயத்துடன் உயிர் காப்பவர்கள் ! நாடியைப் பிடித்துப் பார்த்தே நலம் நலமின்மை சொல்பவர்கள் ! விழிகளை உற்று நோக்கியே வினாக்களுக்கு விடை காண்பவர்கள் ! இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே இனிதே மருந்து தருபவர்கள் ! விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு ஆபத்து நீக்கி அருள்பவர்கள் ! நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் ! வலியால் துடித்து வாடுபவர்களுக்கு வலிஅகற்றும் வல்லவர்கள் ! இரத்தம் போனவர்களுக்கு உடன் இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் ! இதய நோய் உள்ளவர்களுக்கு இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் ! மனோதத்துவமும் அறிந்து வைத்து மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் ! உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின் மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் ! சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும் சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் ! மனித உயிர்களின் மகத்துவமறிந்த மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் ! நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும் நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் ! மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் ! சாகாமல் காத்திட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் ! பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள் எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை ! எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை ! மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் ! மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் ! . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in. https://tamil.pratilipi.com/user/k0xy3pxv2k...

கருத்துகள்