உள்ளம் கவர்ந்த உத்தமர் ! - கவிஞர் இரா. இரவி !

உள்ளம் கவர்ந்த உத்தமர் ! - கவிஞர் இரா. இரவி ! ****** மணிமொழியன் என்பது காரணப்பெயரானது மணியாக மொழியும் நல் உள்ளம்! கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் கொடுத்ததும் மறந்திடும் மனம் படைத்தவர்! இலக்கியம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்கவர் இலக்கியத்தியோடு உணவையும் வழங்கிய வள்ளலார்! உலகத் திருக்குறள் பேரவையின் மணிமகுடம் உலகம் முழுவதும் பேரவையைத் தொடங்கியவர்! கல்லூரி விடுதி என்பது தங்கும் விடுதி மட்டுமல்ல கல்லூரி போல தமிழைக் கற்றுக் கொடுக்கின்றது! அறிஞர்கள் பலரை எங்கிருந்தாலும் அழைத்து வந்து அறிவார்ந்த உரையை ஆற்றவைத்து அழகு பார்த்தவர்! ஒரிசா முதல்வரின் கௌரவ ஆலோசகர் ஓங்கி ஒலித்தார் திருக்குறள் பற்றி திரு. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் கற்பகவினாயகம் உரையாற்றி உணர்த்தினார் திருக்குறள் பெருமையை! பட்டிமன்ற ஆசான் சாலமன் பாப்பையா பலமுறை இங்கு வந்து பட்டிமன்றம் நிகழ்த்தினார்! தமிழ்த்தேனீ இரா.மோகன், நிர்மலா மோகன் தமிழுரை, சிறப்புரை பலமுறை நிகழ்த்தினர்! கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் கர்ஜனை செய்தார் கவியரங்கத் தலைமையேற்று! பத்து நிமிடங்கள் உரையாற்றினால் அதில் இருபது திருக்குறள் மேற்கோள் காட்டி உரையாற்றுவார்! அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்தது என அப்பாவின் வழியில் வெற்றிநடையிடும் கார்த்திகேயன் புலிக்குப் பிறந்தது பூனையாகாது மெய்ப்பிக்க புலிப்பாய்ச்சல் இலக்கியப்பணி நிகழ்த்துகின்றார் அய்யாவின் வழியில் அயராது நடக்கும் அன்பர் கார்த்திகேயன் வாழ்க! வாழ்க!!

கருத்துகள்