நூல் ;கொரோனா இரண்டாம் அலை ! நூலாசிரியர் :மருத்துவர் SG.பாலமுருகன்.குரு மருத்துவமனை ! நூல் மதிப்புரை: கவிஞர் பேனா தெய்வம்

நூல் ;கொரோனா இரண்டாம் அலை ! நூலாசிரியர் :மருத்துவர் SG.பாலமுருகன்.குரு மருத்துவமனை ! நூல் மதிப்புரை: கவிஞர் பேனா தெய்வம் ! 'கொரோனா இரண்டாம் அலை'நூலினைப் படித்தேன், கண்ணுக்குத் தெரியாத தீ நுண்கிருமி (கொரோனா) வைரஸ் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது ,அந்த ரத்தவெறி பிடித்த ராட்சச நோய்க்கு எதிராக தங்கள் மருத்துவ பணியை குரு மருத்துவமனை மதுரை மண்ணிலே செவ்வனே செய்து வருகிறது, நோய் என்றபோது எனக்கு உடனே ஞாபகம் வருவது மதுரையில் நடந்த மிகப்பெரியதாக பஞ்சம் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது,உணவுக்கே மிகப்பெரிய சிக்கலாக இருந்தது ,நாய் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு ஓடினாலும் அதை விரட்டி பிடித்து பறித்து உண்ண கூடிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டனர், மேலும் எறும்புப் புற்றில் உள்ள தானியங்களை பொறுக்கி எடுத்து கொண்டதாக வரலாறு சொல்கிறது,அத்தகைய தாது பஞ்சத்தில் மக்களை காக்க மதுரை குஞ்சரத்தம்மாள் என்ற பெண்மணி தனது சொத்துக்களையெல்லாம் விற்று மக்கள் நலனுக்காக உணவு மற்றும் அரவணைப்பை செய்து வந்தார்,கிட்டத்தட்ட ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாக நின்று செய்து காட்டியவர் மதுரை குஞ்சரத்தம்மாள்.அதேபோல்தான் இன்று குரு மருத்துவமனையும் தனது சொந்த உறவாக தான் நினைத்து மக்களைப் பேணிக் காத்து வருகின்றனர், ஒரு அரசால் செய்ய முடியாததை குரு மருத்துவமனை தனியாளாக போராடி வருகிறது பல மக்களை காப்பாற்றி உள்ளது என்பதை நூலை படிக்கும் போதே தெரிகிறது. குரு மருத்துவமனை அனைத்து மருத்துவமனைகளுக்கும் குரு என்று சொல்லலாம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நேர்மையான தகவமைப்பு அடங்கியுள்ளது. உள்ளதைச் சொல்கிறேன் உள்ளதை சொல்கிறேன் என்ற நோக்கில் எதையும் ஒழிவு மறைவு இன்றி ஆசிரியர் கூறியுள்ளார். நூலின் நுழைவுப் பகுதியில் தமிழறிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டிய விதம் சிறப்பு, மேலும் தமிழறிஞர் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா ஐயா மற்றும் தமிழறிஞர்களின் அணிந்துரை நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது, இந்நூலை தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்துள்ளார், சுத்தம் சுகாதாரம் எனும் அடிப்படையில் நிர்வாக பணிகள் செயல்படுகிறது "என் கடமை பணி செய்து கிடப்பதே"என்ற நாவுக்கரசரின் கோட்பாட்டை நாவில் வைத்து செயல்படுகிறது, கோவிட்-19னை இருபத்தி ஒன்றில் போராடுகிறது, நிச்சயம் வெற்றி பெறும் இது மக்களை தேடிய மருத்துவ மட்டுமன்று மக்களுக்கான மருத்துவமும் தான். இந்த இடத்தில் எனது கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது, "உடலில் ஊசி போடுவதற்கு பெயர் மருத்துவம் அல்ல... உடல் ஊசி போகாமல் பார்த்துக் கொள்வதற்கு பெயர்தான் மருத்துவம்." அத்தகைய பணியைத்தான் குரு மருத்துவமனை செய்து வருகிறது. "கொரோனா என்னும் எமகண்டத்தை தவிர்க்க குரு பகவானுக்கு இடப்பெயர்ச்சி செய்யுங்கள்" இந்நூல் அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய நூல் என்பதை படித்துப் பார்த்தால் தெரியும் ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் மற்றும் குரு மருத்துவமனையின் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐🙏🏾🙏🏾🙏🏾 கவிஞர் பேனா தெய்வம் 6380491682

கருத்துகள்