படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி ! ."தமிழ் மொழியின் தனிச் சிறப்பு "

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி ! ."தமிழ் மொழியின் தனிச் சிறப்பு " உலகிலுள்ள எந்த மொழியிலாவது தன்மொழியின் பெயரை இணைத்து பெயர்கள் உளளனவா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். ஆனால் நம் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கே அந்த சிறப்புண்டு பாரீர் ! இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் தமிழில்..... தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழழகன், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன், தமிழ் வேந்தன், தமிழ் கொடி. என்று தமிழோடு... தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!! தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!! அனைவருக்கும் பகிருங்கள் . ​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​ பெத்தவங்கள ஏன் .............. "அம்மா" "அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.? அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..? *அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?* அ – உயிரெழுத்து. ம் – மெய்யெழுத்து . மா – உயிர் மெய்யெழுத்து. அ – உயிரெழுத்து. ப் – மெய்யெழுத்து . பா – உயிர் மெய்யெழுத்து. தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். . இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. *நமது "தமிழ்" மொழியில் தான் இத்துணை சிறப்பு உள்ளது *_"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம் என்பதாகும். ஆகவே பெற்றோர்களே ! பெற்றெடுத்த மழலைச் செல்வங்களுக்கு அம்மா - அப்பா என்ற அழகு தமிழ்ச் சொற்களை சொல்லிக் கொடுங்கள். தமிழை நேசிப்போம்! தமிழை சுவாசிப்போம் ! " வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் !!

கருத்துகள்