ஆசிரியர் : முதுமுனைவர்.வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், கண்டெடுக்கப்பட்டவர் எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முதுமுனைவர்.வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், கண்டெடுக்கப்பட்டவர் எனும் தலைப்பில். அரிய வகையில் பழத்தைக் கண்டெடுத்தால் வியப்பு, பார்த்திராத மலரைக் கண்டெடுத்தால் மகிழ்ச்சி, பறவையைக் கண்டெடுத்தால் ஆராய்ச்சி, முத்தைக் கண்டெடுத்தால் சாதனை, காசைக் கண்டெடுத்தால் பரவசம். ஆனால் வீதியில் ஆதரவற்ற குழந்தையைக் கண்டெடுத்தால் மனதில் கனத்துத் தொங்கும் துயரம். * 'பெற்றோராக இருப்பது இனிய பொறுப்பு' என்று பிரான்சிஸ் பேகன் குறிப்பிடுகிறார். * பெறுவதால் மட்டும் பெற்றோர் ஆக முடியாது. குழந்தையைத் தருவதால் மட்டும் தாயாகிவிட முடியாது. * அதற்கு அன்னத்தோடு அன்பையும் ஊட்ட வேண்டும். பாலுடன் பாசத்தையும் புகட்ட வேண்டும். * அக்குழந்தையின் வயிறு நிறைவதில் தன் வயிறு காலியாக இருப்பதை மறந்து போகிறவள் தாய். * வளர்த்தவர்களை ஈன்றவர்களாக எண்ணி வளர்வதே குழந்தைக்கு ஏற்றது. * உலகத்திற்கே தான் அழையாத விருந்தாளி என்பதைக்காட்டிலும் பெரிய அவலம் நிகழ வாய்ப்பில்லை. * குழந்தைகள் அனாதையாக்கப்படுவது இழிவு. குற்ற உணர்வினால் பெண் குழந்தைகள் நட்டாற்றில் விடப்படுவது பேரிழிவு. * நம்பிக்கை உறுதியாக இருக்கிறபோது அது நடந்தே தீரும் என்று தோன்றுகிறது. -

கருத்துகள்