ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், யானைகள் உறங்குவதில்லை எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், யானைகள் உறங்குவதில்லை எனும் தலைப்பில். எல்லா வயதினருக்கும் ஆர்வமாக இருப்பது யானை. இந்தியா அதை பாரம்பரிய விலங்காக அறிவித்து மகிழ்ந்திருக்கிறது. * சேரன் செங்குட்டுவன் யானை மீது கம்பீரமாக இருந்ததாக சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. * யானைக்கு தமிழில் எண்ணற்ற சொற்கள். கரி, களிறு, பிடி, பகடு, வேழம், மாதங்கம், கைம்மா, பெருமா, களபம், வாரணம், தோல்,கரிணி,வல்விலங்கு போன்ற பல பெயர்கள். * இந்தியச் சாத்திரங்கள் யானையைக் கொல்வதைக் கண்டித்திருக்கின்றன. * இந்திய யானைக்கு காது சிறியது. துதிக்கை நீளம். தந்தம் சின்னது. முன்னங்காலில் ஐந்தும், பின்னங்காலில் நான்குமாய் நகங்கள். * இந்திய யானைகள் தந்தத்தை மீசையைப்போல நினைத்துக்கொள்கின்றன. * யானை குட்டிபோடும்போது பிரசவ வலியில் இருக்கும் பெண் யானையைச் சுற்றி மற்ற யானைகள் வட்டமாக நிற்கும். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதைப்போல சுற்றுப்புறத்தை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும். * மனிதர்களுக்குள்ளேயே சாதியின் பெயரால் சண்டையிடும் நமக்குத்தான் அடிக்கடி பிடிக்கிறது மதம், யானைக்கு அல்ல. * தனக்கான பொருட்களை திருடித் தின்கிற பாகன்களை அவை மன்னிப்பதே இல்லை. * தமிழில் கோழித் தூக்கம் என்கிற பழமொழி ஒன்று உண்டு. அது கோழியைவிட யானைக்குப் பொருந்தும் என்று ஆய்வு ஒன்று நிரூபித்திருக்கிறது.

கருத்துகள்