18.4.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி குடும்பப் பத்திரிகையில்" மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-

18.4.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி குடும்பப் பத்திரிகையில்" மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * முதுமையில் எது ஊன்றுகோல்? கண்ணீர்விட்டு வளர்த்த மகன்கள் அல்ல; வியர்வை சிந்தி சேமித்த செல்வமே உண்மையான ஊன்றுகோல். * 'தான் உண்டு; தன் வழியுண்டு என இருப்பவர்' என்றால் என்ன பொருள்? சுயநலமானவர் என்று பொருள். * யாருக்குக் கோபமே வராது? அன்பே இல்லாதவர்களுக்கு! * விழிப்புணர்வு இயங்குவதற்கு எளிய வழி? விருப்பத்துடன் எதைச் செய்தாலும் விழிப்புணர்வு விளையும். * உங்கள் வாழ்வின் திருப்புமுனை எது? பேனா முனை. * திருப்தியே அடையாத மனிதர்கள் இருக்கிறார்களே? அவர்கள் மண்டையோடு நிரம்பாத பிச்சைப் பாத்திரம்.

கருத்துகள்