7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* எழுதப் படிக்கத் தெரியாதவன்தான் எழுத்தைக் கண்டுபிடித்தானா?
எழுத்தோ, மொழியோ ஒரு தனிமனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓவியமாக உணர்த்தியவை எழுத்தாகப் பரிணாம வளர்ச்சியடைய எத்தனையோ தலைமுறைகளுடைய முயற்சியும், தலைகளுடைய மூளையும் உதவின. ஒரே நாளில் உண்டானவையல்ல எழுத்தும், மொழியும்.
* குளிர்காலத்தில் சிந்திக்கிற ஆற்றல் குறையுமாமே...?
அடிக்கிற குளிரில் பிடிக்கிற சளியில் மூக்கைச் சிந்திக் கொள்ளவே நேரம் போய்விடுகிறது சிலருக்கு.
* 'பிழைத்தல்', 'வாழ்தல்' என்ன வேறுபாடு?
சக்கையாக நீடித்தல் பிழைத்தல்; சரமாக ஒளிர்தல் வாழ்தல்.
* நம்மை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கு எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும்?
புண்படுத்தியவர்களைப் பார்த்துப் புன்னகை புரியுங்கள். கல்லால் அடித்தவர்களுக்குக் கற்கண்டு தாருங்கள். மன்னிப்பதில் இருக்கும் கம்பீரம் தண்டிப்பதில் இல்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக