7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * குறிப்பில்லாமல் மேடையில் பேசலாமா?

7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர் இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * குறிப்பில்லாமல் மேடையில் பேசலாமா? குறிப்பில்லாமல் பேசுவதில் தவறில்லை; குறிக்கோள் இல்லாமல் பேசுவதுதான் தவறு. * தற்சமயம் செரிமானப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றனவே, எதனால்? உணவைச் செரிமானம் செய்வதைவிட உணர்வைச் செரிமானம் செய்வது சிரமமாய் இருக்கும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். * போலி அதிகாரிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கின்றதே, ஏன்? அதிகாரிகள் அசலாக இருந்தால் போலிகளுக்கு ஏது வேலை? * ' மூட நம்பிக்கை ' என்றால் என்ன? மூடர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று பொருள். * ' கற்பழிப்பு ' என்பது சரியா? வன்புணர்வு என்பதுதான் சரி. கற்பிழப்பு என்று சிலர் அழைப்பதுகூடப் பொருந்தாது. 'கற்பு' என்பது ஆண்கள் பெண்கள் மீது திணித்த சுயநலம்.

கருத்துகள்