ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 அவமானங்கள் இரண்டு வகை. ஒன்று, நாமாகத் தேடிக்கொள்பவை. மற்றொன்று, தாமாக வருபவை. தாமாக வருபவற்றைப்பற்றி நாம் கவலைப்படக் கூடாது.தேவையில்லாமல் சிலர் முகத்தைத் திருப்பிக்கொண்டு போவார்கள். நாம் செய்யாதவற்றிற்குக் கோபப்பட்டு எரிந்து விழுவார்கள். அதற்கெல்லாம் முகம் தளர்ந்து, மனம் சுருங்கி நிம்மதியை இழக்க வேண்டிய அவசியமில்லை. ** நாமாகத் தேடிக்கொள்ளும் அவமானம் அபாயகரமானது. அதற்கு நாமே பொறுப்பு. நாம் செய்கிற பிழைகளால், நேர்மையின்மையால் மாட்டிக்கொண்டு பெறுகிற அவப்பெயர். அதற்குத் தான் கூனிக்குறுக வேண்டும். அப்படிப்பட்ட அவமானம் ஒருமுறைகூட ஏற்படாமல் வாழ்வதே உன்னத வாழ்க்கை. *** தாமாக வருகிற அவமானங்களைச் சந்தித்த பிறகே தரமான மனிதர்கள் உருவாகிறார்கள். அவற்றை மிதிக்காமல் தாண்டிப் போவதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. -

கருத்துகள்