ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு
--நூல் :தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
* பலவீனங்களையே பலமாக நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்!
* 'தெருவில் எறிபவர் மனத்திலோ, தொட்டியிலோ குப்பை? ' என்கிற கேள்வி எழவே செய்கிறது.
* தக்கைச் சொற்களால் ஆன மனிதர்கள் அடுத்தவர் நேரத்தில் எச்சமிடுபவர்கள்.
* எளிய மனிதர்கள் பூமிக்கு வலிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்களுக்குப் பழகிய நம்மால் அவர்களை அடையாளம் காண முடிவதில்லை.
* அனைவரும் புத்திசாலிகள். இதை இன்னும் அறியாமலிருப்பவர்களே பின்தங்குபவர்கள்.
* எத்தனை பேர் என்பதைவிட எவ்வளவு ஈடுபாடு என்பதே வரையறையாக பெரும்பாலான பேச்சாளர்களுக்கு இருக்கிறது. உறங்குகிற ஓராயிரம்பேரைவிட விழித்துக்கொண்டிருக்கிற ஓரிருவர் போதும். பார்வையாளர்களே பேச்சின் தரத்தை உயர்த்துபவர்கள்.
-

கருத்துகள்
கருத்துரையிடுக