*மண்ணும் மக்களும்* - _வெ.இறையன்பு_ ஞா.சந்திரன் கருத்துப் பூங்கா Karuthu Poonga-YouTube channel 9488008365

 *மண்ணும் மக்களும்*

- _வெ.இறையன்பு_

ஞா.சந்திரன் 

கருத்துப் பூங்கா 

Karuthu Poonga-YouTube channel

9488008365


     இந்நூலை வாசிக்க வாசிக்க உடல் சிலிர்க்கிறது; உள்ளம் இனிக்கிறது! 

இறையன்பு அவர்கள் த(ந)மது பழைய பழகிய நினைவுகளைத் திரும்ப நினைக்க வைத்திருக்கிறார். திரும்ப திரும்ப நினைக்க வைக்கிறார்.

இந்நூல் மூத்தோர்களுக்கு நினைவுகள்; இளையோருக்கு வழிகாட்டல்கள்!

இறையன்பு அவர்களைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார். இந்நூலில் உள்ள பல மனிதர்கள் மறைந்துபோனாலும் மறந்துபோக முடியாத மனிதர்கள் என்பதை உணரமுடிகிறது.இவர்களோடு வாழ்ந்த அனுபவத்தை இந்நூல் தருகிறது. நாமும் முழுமனிதனாக வளர வாழ இந்நூல் தூண்டுகோலாக இருக்கிறது.நூலை வாசிக்கும்போதே பல இடங்களில் இதயம் சோகத்தில் மூழ்கி விழிகளில் நீர் வழிகிறது. 

'காவல்காரத்தாத்தா,சரஸ்வதி டீச்சர்,சிங்காரவேலு மாஸ்டர்,அக்ரி சாந்தகுமாரி,டிரைவர் பிரான்ஸ் 'இவர்களை என் இதயத்தில் அடக்கம் செய்திருக்கிறேன்.(29.12.2020 இரவு 11.50மணிக்கு இந்நூலை வாசித்து முடித்தேன்...ஆனால் இரவு முழுவதும் உறங்கவில்லை.இந்நூல் உறங்கவிடவில்லை.)

நெருங்கியவர்களின் அன்பைவிடத் தூரத்து மனிதர் அன்புக்கு அதிக ருசி என்பதை உணரவைக்கிறது.

நமது வாழ்க்கையில் நம்மை சுற்றி நல்ல மனிதர்களை வைத்துக்கொள்கிறபோது நமது வாழ்க்கையே வசந்தமாகும் என்பதை உணரமுடிகிறது.

இந்நூல் விலை கொடுத்து வாங்கும்போது வெறும் காகிதங்கள்தான்; ஆனால் வாசித்து முடித்தப்பிறகு பல  நல்ல மனிதர்களோடு வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது. நல்ல மனங்களைத் தேடச்செய்கிறது.

 *'சிலரை ஒருமுறைதான் சந்திக்கிறோம். சிலரை சில முறைதான் சந்திக்கிறோம். எல்லோரையும் இனி சந்திப்பது அரிது என்கிற எண்ணத்தோடு சந்திக்கத்தொடங்கினால் அவர்கள் ஒவ்வொருவருமே காகிதமல்ல; கலைக்களஞ்சியம் என்பது புரியும்*

 இந்நூலை 2021புத்தாத்தாண்டுக்கு உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பரிசளித்து மகிழுங்கள்...உங்களின் உறவுக்குள் புத்தாக்கம் ஏற்படும்.

வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்

அனைத்து புத்தகக்கடைகளிலும் கிடைக்கின்றன.

விரைக...விலையில்லா மனிதர்களைப் பெறுக!

இறையன்பு எனும் நல்ல மனிதரின் காலத்தில் என்னையும்  வாழ வைத்த இறைவனுக்கு நன்றி!

வாருங்கள்

நல்ல மனிர்களோடு வாழ்வோம்; நல்ல மனிதராய் வாழ்வோம்!


கருத்துகள்