புத்தகம் போற்றுதும்
நூல் ஆசிரியர : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்;சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி : 044-24342810.
பக்கம் : 224 விலை : ரூ.150
*****
இந்நூல் நூல்ஆசிரியரின் 13-ஆவது நூல் ‘புத்தகம் போற்றுதும்’ என்னும் தலைப்பில் 50 நூல்களின் விமர்சனங்களை நூலாசிரியர் தொகுத்துள்ளார். விமாசனம் என்பது சீரிய நேரிய ஆய்வு. இந்நூலில்
50 நூல்களின் விமர்சன வேள்வி நூலாசிரியரால் நிகழ்த்தப் பெற்றுள்ளது. இதில் மூதறிஞர்கள் மூவர், முதுமுனைவர்; ஒருவர், பேராசிரியர்கள் நால்வர், முனைவர்கள் ஒன்பதின்மர், எழுத்து வேந்தர், சொல் வேந்தர், கவி வேந்தர்; என மூவர், கவிஞர்கள் பதினாறு பேர், கவிதையில் பேறு பெற்றவர்;கள் அறுவர், கலைமாமணி விருது பெற்றவர்; மூத்த பத்திர்கையாளர் ஒருவர்,; ஆளுமையினர்; ஒருவர், பொறியாளர் ஒருவர்;, வெற்றியாளர் ஒருவர்,; கவிமுரசு ஒருவர்; என 50 பதின்மர்; படைப்புகள் இடம்பெற்று விமர்சனம் நிகழ்த்தப் பெற்றுள்ளன.
நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் சில :
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. இவர் எழுதியுள்ள நூல் ‘அவ்வுலகம்’. இதில் மூடநம்பிக்கையை எள்ளி நகையாடும் வகையில் இறந்தவர்; நெற்றியில் காசு வைப்பது மூடப்பழக்கம்.
பேராசிரியர் இரா. மோகன். இவரது 100ஆவது நூல் ‘கவிதைக் களஞ்சியம்’ 20 கவிஞர்களின் 20 நூல்களைப். படித்து 20 கட்டுரைகள் எழுதியுள்ளார்;. கவிஞர் ;முடியரசன், கவிஞர் சுரதா, மீரா, அப்துல் ரகுமான், தமிழன்பன், வாலி, மு.மேத்தா, தாராபாரதி, கந்தவர்;மன், காசிஆனந்தன், முத்துலிங்கம், வெ.இறையன்பு, பத்மாவதி, தாயுமானவர், தங்கம் மூர்த்தி, வெற்றிசெல்வம், மு.முருகேஷ் ஆகியோரது கவிதைகளை சுட்டியுள்ளார்;.
முனைவர்;. கு. ஞானசம்பந்தன் : இவரது நூல் ‘ஜெயிக்கப்போவது யாரு? நீ தான்!’ என்பதாகும். 25 தலைப்புகளில், நகைச்சுவைத் ததும்பும் நல்ல எளிய நடையில் சிந்திக்க வைக்கிறார் என்பதை நூலைப் படிக்கத்துண்டும் வகையில் விமர்சகர்; விமர்சித்துள்ளார்.
வித்தகக் கவிஞர் : இவரது நூல் ‘நட்பின் நாட்கள்’ என்பதாகும்.
62 கவிதைகள் அடங்கிய நூல் இது. இதில் நண்பன், பள்ளி, கல்லூரி பற்றிய செய்திகள், ஆசிரியர்; பற்றிய செய்திகள் நூலில் உள்ளன.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் : இவர் திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் என்னும் நூலை யாத்தவர்;. சுறுசுறுப்பே வெற்றி தரும். உண்மை நட்பே உயர்ந்தது. அவமானங்களை எழுச்சியாக்கி உந்து சக்தியாய் மாற்றிட வேண்டும் என்னும் கொள்கையில் உள்ளடக்கிய நூல் இது.
கவிஞர்; ஞா. சந்திரன்: ‘இவர் வலி தாங்கும் மூங்கில்’ என்னும் நூலை எழுதியுள்ளார்;. தன்னம்பிக்கையை மனதில் விதைக்கும் நூலில் 30 கட்டுரைகள் உள்ளன.
இவ்வாறாக அறிஞர்கள், கவிஞர்; பெருமக்கள் நூல்களை நூல்ஆசிரியர்; பதச்சோறாக வழங்கியுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக