முனைவர் இறையன்பு அவர்களின் "மனத்தில் உறுதி வேண்டும்" என்கிற சிறு நூல் படித்தேன்! மகேஸ்வரி, கோவை

 முனைவர் இறையன்பு அவர்களின் "மனத்தில் உறுதி வேண்டும்" என்கிற சிறு நூல்  படித்தேன்.. மகேஸ்வரி, கோவை.


ஏற்கெனவே கேட்ட பேச்சாகிலும்.. அச்சில் படிக்கும் போது ஒரு சுகம்.. 🙏

ஒருவர் மேடையில் பேசிய பேச்சை அப்படியே அச்சுக்கு கொண்டு போனால் எந்த திருத்தமும் செய்யாமல் மிகவும் தெளிவாகவும், புரிதலுடனும்,  தேவை அற்ற வார்த்தைகள் இன்றியும், தலைப்பில் இருந்து சிறிதும் விலகாமல், சொல்ல வேண்டிய கருத்துக்களை அனாயசமாக எடுத்து வைத்து, எதிரில் அமர்ந்துள்ள பார்வையாளர்களை சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்து, பிறகு அச்சில் புத்தகமாக வந்தபின் வாசிப்பவரை வியக்க வைக்க முடியுமானால் அது முனைவர் இறையன்பு அவர்களின்  அற்புத பேச்சாகத்தான் இருக்க முடியும்.. சிந்தனையை செதுக்கி, சிதறாமல் வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியமாக்கி,  செந்தமிழில்  செழுமையாக வெளிப்படுத்த முடியுமானால் அது முனைவர் இறையன்பு எனும் மாமனிதரால் மட்டுமே முடியும்..

எப்படிப்பட்ட பெரிய மனிதரும் சறுக்கி விடுவார்கள் சில வார்த்தைகளில்... ஆனால் முனைவர் இறையன்பு அவர்களின்  பேச்சில் ஒரு சிறு சறுக்கல் இருக்காது...🙏 நான் எப்போதும் வியக்கும் முனைவர் இறையன்புவின் பேச்சு!!! 🙏


கருத்துகள்