படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி இனியநண்பர் ஹிதாயத் துபாய் ! நஞ்சு என்று நீநினைத்து நாடா மதுவை இருந்திடுவாய் ! மகாதேவ ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... ஆஸ்திரேலியா





படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி இனியநண்பர் ஹிதாயத் துபாய் !

 நஞ்சு என்று நீநினைத்து   நாடா மதுவை இருந்திடுவாய் !


    மகாதேவ  ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... ஆஸ்திரேலியா

           மதுவை நாடிப் போகாதே
           மரணம் உன்னை காத்திருக்கு
           அதுவே உந்தன் வாழ்வினிலே
           ஆனந்தம் இல்லா அழித்துவிடும்
           கதவை தட்டும் கொரனோவோ
           காலம் கடந்தால் ஓடிவிடும்
           மதுவோ உன்னைக் காலனிடம்
           விரைவாய் கூட்டிச் சென்றிடுமே !

            குடித்துத் தெரிவில் நீகிடந்தால்
            ஓடித் திரியும் தெருநாய்கள்
            பிணமாய் உன்னை நினைத்தபடி
            பிய்த்து உதற கூடிவரும்
            தெரிவில் போகும் சனமெல்லாம்
            திட்டித் தீர்த்தே சென்றிடுவார்
            எதற்கும் உதவா நிலையினிலே
            இருப்பாய் என்பதை எண்ணிவிடு  !

           கோடி இருப்பார் குடித்தழிப்பார்
           குடிசை இருப்பார் குடியழிப்பார்
            மாடி மனைகளில் இருப்பார்க்கு
            வசதி வாய்ப்பு நிறைந்திருக்கும்
            குடிசை ஒன்றே கதியாக
            வாழும் உனக்கு எதுவிருக்கு
            உயிர்தான் உனக்கு உறுதுணையே
            அதையும் குடியால் அழித்திடாதே  !

            நஞ்சு என்று நீநினைத்து
            நாடா மதுவை இருந்திடுவாய்
            அஞ்சியஞ்சி உன் குடும்பம்
           அழுதே வாழ்க்கையைப் பார்க்கின்றார்
           பிஞ்சுக் குழந்தை முகம்பாரு
           பெற்றதாயின் பேச்சைக் கேள்
           கையைப் பிடித்த மனையாளும்
           கதறிநிற்கும் குடியை விடு !
         

கருத்துகள்