ஏர்வாடியார் வாழ்க! வாழ்க!
- கவிஞர் இரா. இரவி
*****
புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் ஏர்வாடியார்
புத்துணர்வை எழுத்தில் பேச்சில் தரும் ஏர்வாடியார் !
புத்துணர்வை எழுத்தில் பேச்சில் தரும் ஏர்வாடியார் !
தெளிந்த நீரோடையென எழுதுபவர் ஏர்வாடியார்
தன்னம்பிக்கையை எழுத்தால் விதைப்பவர் ஏர்வாடியார் !
தன்னம்பிக்கையை எழுத்தால் விதைப்பவர் ஏர்வாடியார் !
பேச்சில் தனி முத்திரை வடிப்பவர் ஏர்வாடியார்
பெரியவர் சிறியவர் பாகுபாடின்றி பழகும் ஏர்வாடியார் !
பெரியவர் சிறியவர் பாகுபாடின்றி பழகும் ஏர்வாடியார் !
நீதியரசர்கள் தொடங்கி பாமரர் வரை பழகும் ஏர்வாடியார்
நேர்மையான அறவாழ்வு வாழும் ஏர்வாடியார் !
நேர்மையான அறவாழ்வு வாழும் ஏர்வாடியார் !
பிறந்த நாளில் புத்தகம் வெளியிடும் ஏர்வாடியார்
புத்தகங்களுக்கு பரிசுகள் வழங்கிடும் ஏர்வாடியார் !
புத்தகங்களுக்கு பரிசுகள் வழங்கிடும் ஏர்வாடியார் !
யாரிடமும் கோபம் கொள்ளாதவர் ஏர்வாடியார்
யாவரிடமும் அன்பைப் பொழிந்திடும் ஏர்வாடியார் !
யாவரிடமும் அன்பைப் பொழிந்திடும் ஏர்வாடியார் !
கவிதை உறவு மூலம் கவிஞர் உறவு வளர்க்கும் ஏர்வாடியார்
கவிதை கதை நாடகம் கட்டுரை எழுதிடும் ஏர்வாடியார் !
கவிதை கதை நாடகம் கட்டுரை எழுதிடும் ஏர்வாடியார் !
சகலகலா வல்லவராகத் திகழ்ந்திடும் ஏர்வாடியார்
சகலரையும் சகோதரர்களாக நேசிக்கும் ஏர்வாடியார் !
சகலரையும் சகோதரர்களாக நேசிக்கும் ஏர்வாடியார் !
பிறந்த ஊரை பெயரோடு இணைத்திட்ட ஏர்வாடியார்
பிறந்த ஊருக்கும் பெருமைகள் சேர்த்திட்ட ஏர்வாடியார் !
பிறந்த ஊருக்கும் பெருமைகள் சேர்த்திட்ட ஏர்வாடியார் !
வாழ்க வாழ்க நூற்றாண்டுகள் கடந்து வாழ்க

கருத்துகள்
கருத்துரையிடுக