சிந்தித்துப் பார்த்து தவறான முடிவை மாற்ற வேண்டும் . கவிஞர் இரா .இரவி !

சிந்தித்துப் பார்த்து தவறான முடிவை மாற்ற வேண்டும் . கவிஞர் இரா .இரவி !

அரசுப்பணியாளர்கள் என்றால் ஓய்வின்றி வேலை பார்க்கும் காவல்துறை .உயிரை பணையம் வைத்து வேலை பார்க்கும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அனைவருமே .அரசுப்பணியாளர்கள்தான் .அவர்களுக்கும் அகவிலைப்படி இல்லை என்பது உண்மையாக வேலைப்பார்ப்பவர்களுக்கு தண்டனை போல ,அகவிலைப்படி இல்லை என்பது ஒய்வு ஊதியத்தை நம்பி இருப்பவர்களுக்கும் இழப்பு .சிந்தித்துப் பார்த்து தவறான முடிவை நடுவணரசு மாற்ற வேண்டும் .
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு என்பது விடுப்பை அனுபவிக்காமல் பணியாற்றி பெரும் பயன் அதனை இல்லை என்பதும் சரியான முடிவு அல்ல சிந்தித்துப் பார்த்து தவறான முடிவை மாநிலஅரசு மாற்ற வேண்டும் .
வருமான வரி என்ற பெயரில் பிப்ரவரி மாதம் பலர்க்கு முழு ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டது .
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு இல்லை என்றால் அரசுப்பணியாளர்கள் ஈட்டியவிடுப்பு விடுப்பதாக எடுத்தார்கள் என்றால் மக்கள் பணி பாதிக்கும் .
.
விலைவாசி உயர்வை சமாளிக்க வழங்குவதே அகவிலைப்படி .பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே இருக்கின்றது நம் நாட்டில் மட்டும் ..விலைவாசிகள் அனைத்தையும் குறைத்து விட்டு அகவிலைப்படி உயர்வு இல்லை என்று அறிவிக்கட்டும்.
தனியார்கள் பணியாளர்களின் ஊதியத்தில் கை வைக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கி விட்டு அரசுகளே அரசுப்பணியாளர்களின் ஊதியத்தில் பணப்பயனில் கை வைத்து வருகின்றனர்


கருத்துகள்